இப்படியொரு பாலம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை: லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் பாம்பன் புதிய பாலம்

Indian Railways: ரயில்கள் இயங்காதபோது பாலத்தின் அடியில் படகுகள் செல்ல அனுமதிக்கும் செங்குத்து தண்டு இதில் இருக்கும்.

By: July 3, 2020, 8:06:18 AM

Indian Railway News: செங்குத்தாக தூக்கக் கூடிய இந்தியாவின் முதல் ரயில்வே கடல் பாலத்துக்கான முதலாவது தூண் அமைக்கும் பணியை பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியன் ரயில்வே தொடங்கியுள்ளது. செங்குத்தாக தூக்கக் கூடிய ரயில்வே கடல் பாலத்துக்கான வளர்ச்சிப் பணிகள் தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்திய ரயில்வேயின் புதிய பாம்பன் பாலத்துக்கான வளர்ச்சிப் பணிகள் நவம்பர் 8, 2019 ஆம் தேதி தொடங்கியது. இந்த பாலத்திற்கான ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் அடுத்த இரண்டு வருடக் காலத்துக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய பாம்பன் ரயில்வே கடல் பாலம் இந்திய ரயில்வேவுக்கு முதல்முறை திட்டமாகும். இந்த புதிய பாம்பன் ரயில்வே கடல் பாலம் 2.05 கிலோமீட்டர் நீளமுடையது. இது பிரதான நிலப்பரப்பில் உள்ள மண்டபத்தையும் பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது. சுவாரஸ்யமாக இது தேசத்தின் முதல் செங்குத்தாக தூக்கக் கூடிய ரயில் பிரிவைக் கொண்டிருக்கும்.

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ரயில் நிலையங்களில் கொரோனா அறியும் கேமரா

இந்த செங்குத்தாக தூக்கக் கூடிய ரயில் கடல் பாலத் திட்டத்தை Railway Vikas Nigam Limited உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த புதிய பாம்பன் ரயில்வே கடல் பாலத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த புதிய ரயில்வே கடல் பாலம் ரயில்களை அதிவேகத்தில் இயக்கவும், ரயில்கள் அதிக எடையை இந்த பாதை வழியாக கொண்டு செல்லவும் ரயில்வேவுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ரயில்வே கடல் பாலம் பிரதான நிலப்பரப்பில் உள்ள பாம்பன் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்துக்கு இடையேயான போக்குவரத்து அளவை அதிகப்படுத்தும்.

புதிய பாம்பன் கடல் பால கட்டுமானத்துக்காக ரூபாய் 250 கோடி செலவிடப்படுகிறது. பழைய பாம்பன் ரயில்வே பாலம் 1914 ஆம் ஆண்டு மண்டபம் மற்றும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு ஆகியவற்றை இணைப்பதற்காக கட்டப்பட்டது. இந்த இணைப்புக்கு இணையாக ஒரு புதிய சாலை பாலம் கட்டப்படும் 1988 ஆம் ஆண்டுவரை, இந்த இரண்டு இடங்களுக்கிடையில் இணைப்பை வழங்கிய ஒரே தரைவழி பாதை இதுவாகும். இந்த பாலத்தில் படகுகள் இயங்க அனுமதிக்கும் வகையில் மடிப்புகள் (flaps) இருந்தன. எனினும் பழைய பாம்பன் பாலம் வேக மேம்படுத்தலுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் இந்திய ரயில்வே தற்போது புதிதாக ஒரு பாலத்தை கட்ட தீர்மானித்தது. ரயில்கள் இயங்காதபோது பாலத்தின் அடியில் படகுகள் செல்ல அனுமதிக்கும் செங்குத்து தண்டு இதில் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:New pamban rail bridge indian railways constructing first pillar in sea vertical lift rail bridge

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X