ரயில் பயணத்திற்கு உணவு எடுத்துச் செல்கிறீர்களா?- ரயில்வே வகுத்துள்ள விதிமுறைகளை மறந்துறாதீங்க

IRCTC on coronavirus outbreak : இருமல், காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை ஆகிய அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் யாரையும் உணவு பொருட்கள் கையாளும் வணிகத்தில் அமர்த்தக் கூடாது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

indian railways, coronavirus outbreak, coronavirus in india, piyush goyal, railway board, irctc, indian railways takes preventive steps against coronavirus, covid-19, who, world health organisation, coronavirus pandemic, fssai
indian railways, coronavirus outbreak, coronavirus in india, piyush goyal, railway board, irctc, indian railways takes preventive steps against coronavirus, covid-19, who, world health organisation, coronavirus pandemic, fssai

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை ஒரு தொற்று நோய் என அறிவித்துள்ளது. ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சரகம் இந்நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் ரயில்வே வாரியம் இந்நோய் தடுப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கும் (ஐஆர்சிடிசி) வழங்கியுள்ளது. அவற்றில் சில முக்கியமான நோய் தடுப்பு நடவடிக்கைகளை கீழே பார்க்கலாம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இருமல், காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை ஆகிய அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் யாரையும் உணவு பொருட்கள் கையாளும் வணிகத்தில் அமர்த்தக் கூடாது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India -FSSAI) உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தரநிலைகளின்படி உணவு சமைத்தல் மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் தனிமனித சுத்தத்தை பேண வேண்டும். உணவு சமைத்தல் மற்றும் விநியோகத்தில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் உணவு பொருட்களை கையாளும் போது கட்டாயம் கையுறை, முககவசம் மற்றும் குல்லாய் ஆகியவற்றை அணிய வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தங்களது கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும். இருமல் மற்றும் தும்மல் உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும், தங்களது கையுறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும், பழைய கையுறைகளை மூடிய குப்பைத்தொட்டிகளில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உணவு நிறுவனங்களில் அமர்த்தப்பட்டுள்ள அனைத்து மேற்பார்வையாளர்களையும் அவர்களது தனிமனித சுத்தத்தை பராமரிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக அலோசனைகளை தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உணவு சமைத்தலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களையும் தங்களது சீருடையை நன்றாக துவைத்து அணிவதை வழக்கமாக்கி கொள்ளவும், பணியில் உள்ள போது சுத்தமான சீருடையை அணியவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அனைத்து உணவு நிறுவனங்களும் சரியான சுத்தத்தை பராமரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அடிக்கடி தொடும் பொருட்கள் மற்றும் மேற்பரப்புகளான POS இயந்திரங்கள், கதவு கைப்பிடிகள், காபி இயந்திரங்கள், பில் போடும் இயந்திரம், மேஜைகள், நாற்காலிகள், பிரீசர் கைபிடிகள் மற்றும் அதுபோன்றவற்றில் அடிக்கடி கிறுமி நாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்து உணவு நிறுவனங்களிலும் கைகளுவும் சோப்புகள் மற்றும் sanitizers ஆகியவை போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்ய கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் அனைத்து உணவு நிறுவனங்களும் தினசரி அடிப்படையில் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து உணவு பொருட்களையும் சரியான முறையில் பொதியிடுவதை உறுதி செய்ய வேண்டும் மேலும் தளர்வான முறையில் பொதியிடுவதை முடிந்த அளவு தவிர்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து உணவு பொருட்களையும் சுகாதாரமான முறையில் சேமித்து வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உணவு கையாளும் பகுதிகளில் வெளியாட்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian railways coronavirus outbreak piyush goyal railway board irctc

Next Story
’நாயகி’ சீரியல் ஆனந்தி : ஆச்சர்யப்பட வைக்கும் மறுபக்கம்!Nayagi Serial Anandhi, Vidhya Pradeep
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com