Advertisment

முன்பே கேன்சல் செய்த ரயில் டிக்கெட்டுக்கும் முழுத் தொகை: பெறுவது எப்படி?

பாதி தொகை மட்டும் திரும்ப கிடைத்த பயணிகள், ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை ரயில்வே அலுவலகத்துக்கு அனுப்பி மீதித் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian railways, railways, irctc, refund, train cancellation, e-ticket, coronavirus, covid 19

indian railways, railways, irctc, refund, train cancellation, e-ticket, coronavirus, covid 19

நோவல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 14 ஏப்ரல் 2020 வரை இந்திய ரயில்வேயின் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக 21 மார்ச் 2020 முதல் 14 ஏப்ரல் 2020 வரை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில் பயணச்சீட்டுகளுக்கும் முழு தொகையையும் திரும்பி தர தேசிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. பாதி தொகை மட்டும் திரும்ப கிடைத்த பயணிகள், ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை ரயில்வே அலுவலகத்துக்கு அனுப்பி மீதித் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மார்ச் 21, 2020 அன்று வெளியிட்ட பணத்தை திருப்பி செலுத்தும் விதி (Refund Rule) தளர்வுகளில் இந்த வழிமுறைகள் கூடுதலாக மற்றும் தொடர்ச்சியாக இருக்கும், என ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட ஒரு செய்திகுறிப்பு கூறுகிறது. கோவிட் -19 தொற்று காரணமாக பயணிகள் பயணச்சீட்டை ரத்து செய்வதற்காகவோ அல்லது பணத்தை திரும்ப பெறுவதற்காகவோ ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளுக்கான பயணச்சீட்டு பணத்தை திரும்ப பெற இந்தியன் ரயில்வேயின் நடைமுறை பின்வருமாறு.

1) ஐஆர்சிடிசி மின்னணு பயணச்சீட்டு (e-tickets)

a) 27 மார்ச் 2020க்கு முன் ரத்து செய்யப்பட்ட ஐஆர்சிடிசி யின் ரயில் மின்னணு பயணச்சீட்டுகள் : பயணி அல்லது ரயில் பயணர் எந்த வங்கி கணக்கில் இருந்து பயணச்சீட்டை முன்பதிவு செய்தாரோ அந்த கணக்கில் பயணச்சீட்டுக்கான கட்டணத்தில் திரும்ப பெற்றது போக மீதமுள்ள தொகையை இந்திய ரயில்வே வரவு வைத்துவிடும். மீதமுள்ள திரும்ப செலுத்த வேண்டிய பணத்தை, பயணிகளிடம் கொடுப்பதற்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஒரு utility ஐ தயாரிக்கும்.

b) 27 மார்ச் 2020 க்கு பிறகு ரத்து செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகள்: அத்தகைய அனைத்து ரத்தான ரயில்களுக்கும், இந்திய ரயில்வே பயண்ச்சீட்டுக்கான முழு தொகையையும் பயணிகளிடம் திரும்ப கொடுக்கும். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

2) ரயில்வே கவுண்டரில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் (PRS Tickets)

a) 27 மார்ச் 2020க்கு முன் ரத்து செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகள்

திரும்ப பெறவேண்டிய பணத்தின் மீதமுள்ள தொகையை பெற, பயணிகள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பயண விவரங்களோடு TDR (Ticket Deposit Receipt) ஐ Chief Commercial Manager (Claims) அல்லது ஏதேனும் மண்டல ரயில்வே தலைமையக Chief Claims Officer க்கு 21 ஜூன் 2020 வரை தாக்கல் செய்யலாம்.

b) 27 மார்ச் 2020 க்கு பிறகு ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகள்

அத்தகைய அனைத்து ரயில்களுக்கும் இந்திய ரயில்வே முழு தொகையையும் வழங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment