IRCTC News: ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த ரயில் பயணச்சீட்டுக்கான பணம் திரும்ப கிடைக்குமா என்ற கவலையா ? கவலையை விடுங்கள் ஐஆர்சிடிசி யின் இ-பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டியதில்லை. பயணச்சீட்டுக்கான உங்கள் பணம் தானாக உங்கள் வங்கி கணக்கில் திரும்ப வந்து விடும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்திய ரயில்வே பயணிகள் பணம் திரும்ப கிடைக்குமா என பீதியடைய வேண்டாம்! இந்திய ரயில்வேயின் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் பயணச்சீட்டுக்கான கட்டணம் பயணிகளிடம் திரும்ப தரப்படும். இந்திய ரயில்வேயில், ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான கட்டணம் திரும்ப ஒப்படைக்கும் செயல்முறை தானாக செயலாக்கப்படும், என சமீபத்தில் இந்திய ரயில்வேயின் மின்னனு பயணச்சீட்டு வழங்கும் நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation IRCTC) அறிவித்துள்ளது. ”அடிப்படையாக நாங்கள் கூறுவது என்னவென்றால், பயணிகள் ஆன்லைனில் சென்று ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பயணச் சீட்டுகளை ரத்து (cancel) செய்ய வேண்டாம். ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்படி, முன்பதிவு செய்யப்பட்ட மின்னணு பயணச்சீட்டுகள் தானாக ரத்து செய்யப்பட்டு கட்டணத்தொகையை திரும்ப செலுத்தும் நடைமுறை தானாக செயலாக்கப்படும்”, என ஒரு ஐஆர்சிடிசி அதிகாரி தெரிவித்தார். சிக்கலில்லாமல் கட்டணத் தொகையை திரும்ப செலுத்தும் நடைமுறையை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலைய பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் மையத்தில் (PRS counters) முன்பதிவு செய்த பயணச்சீட்டுக்காண கட்டண தொகையை திரும்ப பெறும் விதிகளையும் இந்திய ரயில்வே திருத்தியமைத்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான கட்டண தொகையை திரும்ப பெற பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தொகையை திரும்ப பெறுவதற்கான கால அளவை இந்திய ரயில்வே ஜூன் மாதம் வரை நீட்டித்துள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே ஓய்வு அறைகளில் ரயில் பயணிகள் இத்தனை நாள் தான் தங்கலாம் என்று உள்ள விதியை தளர்த்தி தங்குவதற்கான கால அளவை நீட்டித்து ரயில்வே வாரியம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அனைத்து பிரீமியம், எக்ஸ்பிரஸ், புறநகர் மற்றும் பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சரகம் நோவல் கொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.