பயணிகளின் கனிவான கவனத்திற்கு... விநாயகர் சதுர்த்தி விழா: நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்கள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 6 வரை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 6 வரை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
special train

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... விநாயகர் சதுர்த்தி விழா: நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்கள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி நெருங்கிவரும் நிலையில், மக்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக, ரயில்வே அமைச்சகம் பத்திரிகை தகவல் மையம் (PIB) மூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisment

பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2023-ம் ஆண்டு 305 சிறப்பு ரயில்களும், 2024-ம் ஆண்டு 358 ரயில்களும் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரயில்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது.

லட்சக்கணக்கான பயணிகளின் வசதிக்காக, கொங்கன் ரயில்வே வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான ரத்னகிரி, சிப்ளுன், குடால், சாவந்த்வாடி சாலை, கங்காவ்லி, மார்கோவ் ஜங்ஷன், உடுப்பி மற்றும் கார்வார் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் நின்று செல்லும். விநாயகர் சதுர்த்தியின்போது அதிக பயணிகள் கூட்டம் இந்த வழித்தடத்தில்தான் இருக்கும் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களில், மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பிராந்தியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மத்திய ரயில்வே மட்டும் 296 சேவைகளை இயக்க உள்ளது. அதேபோல், மேற்கு ரயில்வே 56 சிறப்பு ரயில்களையும், தென் மேற்கு ரயில்வே 22 ரயில்களையும், கொங்கன் ரயில்வே (KRCL) 6 ரயில்களையும் இயக்க உள்ளது.

Advertisment
Advertisements

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை கொண்டாடப்பட உள்ளது. விநாயகப் பெருமான் பக்தர்களின் வீடுகளுக்கு வருகை தருவதைக் குறிக்கும் இந்தப் பண்டிகை, மகாராஷ்டிராவின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த நேரத்தில், குடும்பங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விநாயகர் சிலைகளைக் கொண்டு வந்து, பூஜைகள் செய்து, ஊர்வலங்களில் பங்கேற்று, பின்னர் சிலைகளை நீரில் கரைப்பது வழக்கம். பண்டிகையின் முக்கியத்துவம் காரணமாக, கொங்கன் பகுதிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் அதிகரிக்கிறது. இதை சமாளிக்க, ஆகஸ்ட் 11 முதலே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்திப் பண்டிகையின்போது, ரயில் பயணம் மிகவும் வசதியான போக்குவரத்து முறையாகக் கருதப்படுகிறது. கொங்கன் பகுதியின் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, ரயில் பயணம் வேகம், பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்குகிறது. பயணிகள், ஐஆர்சிடிசி இணையதளம், பிஆர்எஸ் (PRS) மற்றும் ரயில்ஒன் செயலி (RailOne app) மூலம் இந்த ரயில்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறியலாம்.

Special Trains

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: