scorecardresearch

சலுகைகள் பிளஸ் இலவச விமான பயணம் – அசத்தும் இண்டிகோ

Indigo credit card : இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கடன் அட்டைகளை (credit card) பயன்படுத்தி இனி இண்டிகோ பயணிகள் இலவச விமான பயணச்சீட்டு மற்றும் இதர பயண மற்றும் லைப்ஸ்டைல் சலுகைகளை பெறலாம்

indigo credit card, indigo credit card offer, indigo web check in, indigo airlines, hdfc credit card, hdfc credit card offers
indigo credit card, indigo credit card offer, indigo web check in, indigo airlines, hdfc credit card, hdfc credit card offers

இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கடன் அட்டைகளை (credit card) பயன்படுத்தி இனி இண்டிகோ பயணிகள் இலவச விமான பயணச்சீட்டு மற்றும் இதர பயண மற்றும் லைப்ஸ்டைல் சலுகைகளை பெறலாம். இண்டிகோ தனது முதல் கடன் அட்டையான ‘Ka-ching’ ஐ ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank) மற்றும் Mastercard உடன் சேர்ந்து கூட்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. இண்டிகோ கடன் அட்டைதாரர்கள் இனி இலவச விமான பயணச்சீட்டுகள், வெகுமதிகள், தள்ளுபடிகள் போன்ற நன்மைகளை இண்டிகோ பரிவர்த்தனைகளின் மூலம் வரவேற்பார்கள் மேலும் உணவு, பொழுதுபோக்கு மற்றும் மளிகை உட்பட.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இண்டிகோ கடன் அட்டைகள் 6E Rewards மற்ரும் 6E Rewards XL ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது. ரூபாய் 1,500 மற்றும் ரூபாய் 3,000/- ஆகியவற்றுக்கு இடைப்பட்ட அளவில் ஆக்டிவேஷன் செய்யும் போது வாடிக்கையாளர்கள் சொகுசான பயண அனுபவம் மட்டுமல்லாது இலவச பயணச் சீட்டுக்களையும் பெறுவார்கள். இவை தவிர இண்டிகோ கடன் அட்டைதாரர்கள் லாபகரமான பயன்களான இலவச சாப்பாடு, இருக்கைகள் தேர்வு, exclusive lounge நுழையும் சலுகை, இந்தியா முழுவதும் உள்ள பல முன்னனி கோல்ப் விளையாட்டு பயிற்சிகளில் விளையாடும் சலுகை, மருத்துவ நிபுணர்களிடம் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் செக்-இன்னில் முன்னுரிமை ஆகியவற்றையும் பெறுவார்கள்.
IndiGo credit card 6E Rewards XL
இந்த வகை அட்டையை ஆகிடிவேஷன் செய்யும் போது ரூபாய் 3,000/- மதிப்பிலான இலவச விமான பயண்ச்சீட்டை பயனாளிகள் பெறுவார்கள். முக்கிய வசதிகளான செக்-இன்’ னில் முன்னுரிமை, இலவச சாப்பாடு, இருக்கை தேர்ந்தெடுப்பது போன்றவையும் கிடைக்கும். மேலும் பயனாளிகளுக்கு 5 சதவிகித 6E வெகுமதிகளும் இண்டிகோ பரிவர்த்தனை மூலம் கிடைக்கும்.
IndiGo credit card 6E Rewards
பயனாளிகள் ரூபாய் 1,500/- மதிப்பிலான இலவச விமான பயணச்சீட்டுகளை இந்த வகை அட்டையை ஆகிடிவேஷன் செய்யும் போது பெறுவார்கள். மேலும் பயணிகள் 6E Prime Add-on வசதிகளான இருக்கை தேர்ந்தெடுப்பது, செக்-இன்’ னில் முன்னுரிமை மற்றும் இலவச சாப்பாடு ஆகியவற்றையும் பெறுவார்கள். பயனாளர்கள் 2.5 சதவிகித 6E வெகுமதிகளை இண்டிகோ பரிவர்த்தனைகளின் மூலம் பெறுவார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Indigo credit card indigo credit card offer indigo web check in indigo airlines