ஒரு முறை இர்பான் செய்வது போல் நீங்களும் இஞ்சி புளி சட்னி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
1 ஸ்பூன் கடலை பருப்பு
4 பூண்டு
3 வத்தல்
1 நெல்லிக்காய் அளவு புளி
இஞ்சி 75 கிராம்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பூண்டு , வத்தல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் இஞ்சி நறுக்கி சேர்க்கவும். தொடர்ந்து புளி சேர்த்து கிளரவும். இதை நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். இதில் கடுகு, எண்ணெய், கருவேப்பிலை தாளித்து கொட்டவும். அரைக்கும்போது வெல்லம் வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளலாம்.