/indian-express-tamil/media/media_files/2025/08/19/ambani-2025-08-19-12-56-56.jpg)
ரூ.600 கோடி ஜெட் முதல் ரூ.1.5 கோடி ஜப்பான் டீ செட் வரை... அம்பானி குடும்பத்தினரின் 10 காஸ்ட்லி பொருள்கள்!
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2025-ம் ஆண்டுப் பணக்காரர்கள் பட்டியலில், $99 பில்லியன் (சுமார் ₹8,20,000 கோடி) சொத்து மதிப்புடன் ஒன்பதாவது இடத்தில் முகேஷ் அம்பானி குடும்பம் இடம்பெற்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியும், தொலைத்தொடர்பு துறையை நிர்வகிக்கும் அவரது சகோதரரும் இந்தியாவின் மிகப் பணக்காரக் குடும்பமாகத் திகழ்கின்றனர்.
ஆடம்பரத்திற்கும், செல்வச் செழிப்பிற்கும் ஒரு அடையாளமாகவே கருதப்படும் அம்பானி குடும்பம், தங்கள் செல்வத்தைக் காண்பிக்கத் தயங்குவதில்லை. சமீபத்தில், முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமண விழாவில், உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களை வரவழைத்து மாதக்கணக்கில் கொண்டாட்டங்களை நடத்தியது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அம்பானி குடும்பத்தின் மிக விலை உயர்ந்த சொத்துக்களின் சில விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
ரூ.40 லட்சம் புடவை: நிதா அம்பானி தனது உடைகளில் எந்த சமரசமும் செய்வதில்லை. அவரது சேகரிப்பில், ரூ.40 லட்சம் மதிப்புள்ள சென்னை பட்டுப் புடவை ஒன்றும் அடங்கும்.
ரூ.1.5 கோடி டீ செட்: ஜப்பானிய பிராண்டான நோரிடேக்-கின் டீசெட் ஒன்று இவர்களிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கமும், பிளாட்டினமும் கொண்டு பதிக்கப்பட்ட பீங்கான் பாத்திரங்கள் இதில் உள்ளன.
சொகுசு கார்கள்: அனந்த் அம்பானிக்கு அவரது திருமணத்திற்கு பரிசாகக் கிடைத்த ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்டம் காரின் மதிப்பு சுமார் ரூ.9.5 கோடி. இவருக்கெனப் பிரத்தியேகமாகத் வடிவமைக்கப்பட்ட பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் காரும் உள்ளது, அதன் மதிப்பு ரூ.4.5 கோடி.
அரிய வகை கடிகாரங்கள்: அனந்த் அம்பானியின் கடிகார சேகரிப்பில், உலகிலேயே அரிதான பல கடிகாரங்கள் உள்ளன. அவற்றில், ரிச்சர்ட் மில்லே RM 52-05 கடிகாரம் ரூ.12.5 கோடி மதிப்புடையது. இது மொத்தமே 30 மட்டுமே தயாரிக்கப்பட்டது. மேலும், உலகின் 6 அரிய கடிகாரங்களில் ஒன்றான பாடெக் பிலிப் கிராண்ட்மாஸ்டர் சைம் கடிகாரமும் அவரிடம் உள்ளது.
100-கேரட் வைர நகைகள்: நிதா அம்பானிக்குச் சொந்தமான அரிய நகைகளில், 1000 மணிநேரம் உழைத்து உருவாக்கப்பட்ட 100-கேரட் மஞ்சள் வைர நகையும் அடங்கும்.
ரூ.90 கோடி ஆடியூ கார்: நிதா அம்பானிக்குச் சொந்தமான ஆடி A9 கார் ஒன்று, நிறம் மாறும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.90 கோடி.
ரூ.600 கோடி தனி விமானம்: முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான தனிப்பட்ட விமானம் சுமார் ரூ.600 கோடி மதிப்புடையது. இது 35,000 அடி உயரத்தில் ஒரு நடமாடும் தலைமை அலுவலகம் போல, நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
துபாயில் ரூ.640 கோடி பங்களா: தனது மகன் அனந்திற்காக முகேஷ் அம்பானி துபாயில் வாங்கிய பாம் ஜுமேரா பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.640 கோடி. இதில் 10 படுக்கையறைகள், தனிப்பட்ட கடற்கரை, நீச்சல் குளங்கள் எனப் பல ஆடம்பர வசதிகள் உள்ளன.
மும்பை இந்தியன்ஸ்: இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) கடந்த 2003-ம் ஆண்டு முதல் இவர்களின் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்று, மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்பு ரூ.10,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே ஐபிஎல்-லின் மிகவும் மதிப்புமிக்க அணியாகும்.
அன்டிலியா: உலகளவில் ரியல் எஸ்டேட் துறையில் அடையாளமாக விளங்கும் அம்பானி குடும்பத்தின் வசிப்பிடம், 'அன்டிலியா'. இதன் மதிப்பு ரூ.15,000 கோடி. 65,000 சதுர அடிக்கு மேல் உள்ள இந்த மாளிகையைப் பராமரிக்க 600 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.