சவாசனா முதல் விபரீத கரணி வரை நீங்கள் இந்த யோகா பயிற்சிகளை மேற்கொண்டால், இவை உங்கள் குட்டித்தூக்கத்தை ஆழ்ந்த தூக்கமாக மாற்றும்.
ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. நம்மில் பலர் நாட்களை எண்ணுவதைக் கூட விட்டுவிட்டோம். தவிர நம்முடைய தூக்க சுழற்சியை நாம் இழந்து விட்டோம் என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இரவு , பகல் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நாம் ஏன் தெளிவான வித்தியாசமான கனவுகளைக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் முழுமையாக தூங்குவதற்கு உதவும் ஐந்து யோகா பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்.
பாலாசனா
இந்த பயிற்சி நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதற்கு உதவக் கூடிய மிகவும் திறன்வாய்ந்த ஒன்றாகும். உங்கள் நெஞ்சு பகுதி, உங்கள் வயிறு ஆகியவை தரையில் விரிக்கப்பட்ட விரிப்பில் தொடும் வகையில் இருக்கட்டும், உங்களுடைய பின்புறம் உங்களுடைய கணுக்காலை தொடும் வகையில் இருக்கட்டும். உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உங்கள் கைகளை நீட்டி வைத்திருங்கள். இந்த பயிற்சியில் ஈடுபடும்போது உங்கள் சுவாசத்தை உற்றுநோக்குங்கள். 30 விநாடிகள் இந்த பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. 15 நொடிகளுக்கு பின்னர் மீண்டும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
ஆனந்த பாலாசனா
அடிவயிற்று பிரச்னைகள் , மாதவிடாய் கால பிரச்னைகள் தீருவதற்கு மிகவும் நல்ல பயிற்சியாக இது இருக்கிறது. உங்கள் காலை பிடித்து படத்தில் உள்ளது போல முழங்கால்கள் உங்கள் நெஞ்சுக்கு அருகே பக்கவாட்டில் இருக்கட்டும். உங்கள் தலை பின் முதுகு ஆகியவை தரையில் விரிப்பை தொட்டபடி இருக்கட்டும். இதே நிலையில் ஒரு நிமிடம் இருக்கவும். இது அழுத்தத்தைக் குறைக்கின்றது. உறக்கத்துக்கு உதவுகிறது.
சயன பட்டாம்பூச்சி அல்லது சுப்த பத்த கோனாஸனா
இந்த பயிற்சி, உங்கள் உடல் ஓய்வு நிலைக்கு மாற உதவுகிறது. ஒப்பீட்டளவில், இது நன்கு அறியப்பட்ட யோகாப் பயிற்சியாகும். உங்கள் படுக்கை விரிப்பில் உட்காருங்கள். உங்கள் கால்பாதங்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து வைய்யுங்கள். பின்னர் பாதங்களை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள், முழங்கால்களை மட்டும் பட்டாம்பூச்சி பறப்பது போல அசையுங்கள். கால்களின் இரண்டு பக்கமும் கீழே வசதியாக குஷன் ஏதேனும் வைத்துக் கொள்ளலாம். குறைந்தது ஒரு நிமிடமாவது இந்த பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
விபரீத கரணி
இந்த யோகா பயிற்சி நீங்கள் அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. நீண்ட வேலைக்குப் பின்னர் ஓய்வெடுக்க உதவுகிறது. உங்கள் கால்களை நீட்டி சுவரைத் தொடும்படி வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே ஐந்து நிமிடங்கள் இருந்தால் நல்ல பலன் கொடுக்கும். உங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
சவாசனா
உங்கள் கால்களை சற்றே அகல விரித்தபடி, கைகளையும் இரண்டு பக்கமும் விரித்தபடி இருக்கவும். உங்கள் கைகளை உங்கள் வயிற்றில் கூட வைத்துக் கொள்ளலாம். சுவாசத்தில் கவனம் செலுத்தவும். உங்கள் தாடை மற்றும் உடற்பகுதியை தளர்வாக வைத்திருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.