இனி சட்னி செய்வது ரொம்ப ஈசி. இப்படி டிரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் உளுந்து
2 ஸ்பூன் பொட்டுக்கடலை
1 ஸ்பூன் வேர்கடலை
2 ஸ்பூன் எண்ணெய்
7 பூண்டு
சிறிய அளவு புளி
4 மிளகாய் வத்தல்
1 கொத்து கருவேப்பிலை
1 கப் தேங்காய் துருவல்
உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் உளுந்து, பொட்டுக்கடலை, வேர்கடலை சேர்த்து வறுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பூண்டு, புளி, வத்தல், கருவேப்பிலை சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதையெல்லாம் சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை நாம் ப்ரிஜில் வைக்கலாம். எப்போது வேண்டுமோ, அதில் சூடான தண்ணீர் சேர்தால் போதும் சட்னி ரெடி.