instant dosa recipe in tamil: தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான உணவுகளாக இட்லி, தோசை போன்ற உணவுகள் உள்ளன. இதில் தோசையை பிடிக்காத மக்களே இருக்க மாட்டார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் மிகவும் பிடித்த உணவாக இது உள்ளது. இவற்றில் பல வகையில் உள்ளன. அதோடு இவற்றை தயார் செய்த சில நிமிடங்கள் போதும்.
இப்படி எளிய முறையில் தயார் செய்யக்கூடிய தோசைக்கு நாம் சில நேரங்களில் மாவு அரைக்க தவறி இருப்போம். அல்லது நாம் ரெகுலராக மாவு வாங்கும் கடை பூட்டப்பட்டு இருக்கும். இந்த தருணத்தில் வீட்டில் உள்ள மக்கள் தோசை கேட்டால் அது இயலாத காரியமாக அமைந்துவிடும். ஆனால், நாம் இப்போது பார்க்கவுள்ள சிம்பிள் டிப்ஸ் மூலம் டேஸ்டியான தோசைகளை சில நிமிடங்களில் தயார் அசத்தி விடலாம்.

இன்ஸ்டன்ட் தோசை செய்யத் தேவையான பொருட்கள்:
தக்காளி – 4
சீரகம் – 1/2 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி தழை – 1 கொத்து
உப்பு – 1 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 5 ஸ்பூன்
அரிசி மாவு – 1/2 கப்
ரவை – 1/2 கப்
கோதுமை மாவு – கால் கப்
இன்ஸ்டன்ட் தோசை சிம்பிள் செய்முறை:
இந்த அற்புத தோசையை தயார் செய்ய முதலில் தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு அவற்றை மிக்சியில் இட்டு சீரகம், தனி மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போன்றவற்றை சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும்.
இதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவற்றுடன் அரிசி மாவு, ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.
தொடர்ந்து தோசை தயார் செய்யும் அளவிற்கு ஏற்ற தேவையான தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். பின்னர் இவற்றை 10 நிமிடங்களுக்கு நன்கு ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த மாவை கொண்டு தோசைகளை சுட ஆரம்பிக்கலாம். எப்போதும் போல் கல்லில் மாவை ஊற்றிய பிறகு எண்ணெய் இட்டு பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்ப்பர்த்த தோசை தயாராக இருக்கும். இவற்றுடன் உங்களுக்கு பிடித்த சைடிஷ் சேர்த்து ருசித்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“