அடடா! மருதாணி இல்லாமல் வெறும் மஞ்சள் தூள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு உங்கள் கைகளை சிவக்க வைக்க ஒரு சூப்பரான வழி இருக்கிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்! பண்டிகை காலங்களில் அல்லது திடீரென ஒரு விழாவுக்கு செல்லும்போது மருதாணி கிடைக்காத சமயங்களில் இந்த முறை கைகொடுக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு - ஒரு சிட்டிகை
Advertisment
Advertisements
தண்ணீர் - தேவையான அளவு
தயாரிக்கும் முறை:
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். இந்த அளவு இரண்டு கைகளுக்கும் தாராளமாகப் போதுமானது.
இதனுடன் ஒரு சிறிய அளவு சுண்ணாம்பைச் சேர்க்கவும். மஞ்சள் தூளின் அளவிற்கு ஏற்ப சுண்ணாம்பை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
இப்போது, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் அளவிற்குக் கணக்கு இல்லை; மாவு போல கெட்டியாக வரும் வரை கலக்க வேண்டும்.
மஞ்சள் தூளும் சுண்ணாம்பும் சேரும்போது ஒரு வேதியியல் மாற்றம் (reaction) ஏற்பட்டு, கலவை படிப்படியாக சிவப்பு நிறமாக மாறும். நன்கு கலந்தால், அடர் சிவப்பு நிறத்தில் உங்களுக்கு ஒரு பசை கிடைக்கும்.
நீங்கள் இதை பசை போல கெட்டியாகக் கரைக்கலாம் அல்லது சற்று நீர்த்துப் போகும்படி கரைக்கலாம். நீர்த்துப் போகுமாறு கரைத்தால், பட்ஸ் பயன்படுத்தி அழகிய டிசைன்கள் போடலாம். கெட்டியாகக் கரைத்தால், பொட்டு வைப்பது போல் வைத்துக் கொள்ளலாம்.
கைகளில் இடும் முறை
இந்தக் கலவையை கைகளில் இட்ட பிறகு, 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் போதும். கழுவியவுடன், கைகள் நல்ல சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.
இந்த மருதாணி ஒரு நாள் அல்லது அதிகபட்சம் இரண்டு நாட்கள் வரை கைகளில் இருக்கும். இது உடனடித் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு முறையாகும்.
நகங்களுக்கு இந்த முறை அவ்வளவாக நிறம் தராது. வெறும் மஞ்சள் நிறமாகத் தெரியக்கூடும். இந்த எளிய முறையில் மருதாணி இல்லாமல் உங்கள் கைகளை அழகுபடுத்தலாம்.