scorecardresearch

ஈஸியான இன்ஸ்டன்ட் இட்லி: மிக்ஸி- கிரைண்டர் தேவையே இல்லை

மிக்ஸி – கிரைண்டர் இல்லாமல் இன்ஸ்டன்டாக இட்லி தயாரிக்கும் வழிமுறைகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

ஈஸியான இன்ஸ்டன்ட் இட்லி: மிக்ஸி- கிரைண்டர் தேவையே இல்லை

தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவுகளாக இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை உள்ளன. இவற்றில் இட்லி பிரியர்கள் அவை சூடாகவும், பூப்போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதே வேளையில் தோசை பிரியர்கள் நன்றாக மொறு மொறுவென்று இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு. அதிலும், வீட்டிலேயே மாவு அரைத்து இட்லி, தோசை சுட்டு சாப்பிட்டால் அதன் சுகமே தனி. ஆனால், மாவு அரைக்கும் பிராசஸ் இன்றளவிலும் சிரமமாக தான் உள்ளது. பெரும்பாலானோர் கிரைண்டரில் மாவு அரைக்க சிரமப்பட்டு, வெளியில் கடைகளில் விற்கப்படும் மாவு பாக்கெட்டுகளை வாங்குகின்றனர். ஆனால், அவை தரம் வாய்ந்ததா ? அதில் சத்துக்கள் கிடைக்குமா ? என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது. 
ஆனா இவங்க, மிக்ஸி – கிரைண்டர் இல்லாமல் இன்ஸ்டன்டாக இட்லி தயாரிக்க முடியும் என சொல்கிறார்களே.. வாங்க அதை தயாரிக்கிற வழிமுறைகளைப் பார்க்கலாம்.
தேவையானவை
1
 கப் அளவு அவுல்

அரை கப் அளவு

ரவை1 கப் அளவு தயிர்

முதலில் பாத்திரத்தில் 1 கப் அவுல் மற்றும் 1 கப் தயிரை போட்டுவிட்டு, அதை நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். 10 நிமிடம் அதை ஊற வைத்த பிறகு, அதில் அரை கப் ரவையை சேர்க்க வேண்டும். அடுத்த தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கலக்கிவிட்டு ஊற வைக்க வேண்டும்.
தொடர்ந்து, குறைந்த அளவில் உப்பு  சேர்த்துவிட்டு மிக்ஸ் செய்ய வேண்டும். அவுல் மாவு நன்கு கலக்கியதையடுத்து, இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி, வெக வைக்க வேண்டும்.


10 நிமிடத்தில் இட்லி ரெடி.. நீங்கள் சாப்பிட ஆரம்பிக்கலாம். இந்த வழிமுறைகளை விரிவாக தெரிந்துகொள்ளக் இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் https://www.youtube.com/watch?v=xKXI939F5EQ

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Instant idly making without help of mixie or grinder