இட்லி, தோசை செய்ய இப்படி பொடி செய்து வைத்துகொண்டால். தேவையான நேரத்தில் பொடியை தண்ணீர், உப்புடன் சேர்த்து மாவாக மாற்ற முடியும்.
தேவையான பொருட்கள்
4 கப் இட்லி அரிசி
1 டீஸ்பூன் அளவு வெந்தயம்
1 கப் உளுந்து
1 டீஸ்பூன் உப்பு
தயிர் 50 எம்.எல்
தேவையான அளவு சோடா உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதிகமாக நிறம் மாற வேண்டாம். தொடர்ந்து அதில் வேந்தயம் சேர்த்து, இரண்டையும் சேர்த்து வறுக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து உளுந்தையம் வறுத்துக்கொள்ளவும். மூன்றையும் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். நீங்கள் இட்லி, தோசை செய்வதற்கு முன்பாக இந்த பொடி, தண்ணீர், உப்பு, சோடா உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். 8 மணி நேரம் கழித்து தோசை, இட்லி செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“