இப்படி குழம்பு பேஸ்டை நீங்கள் ஒரு முறை அரைத்து, அதை கண்ணாடி பாத்திரத்தில் ஸ்டோர் செய்து வைத்தால் போதும். எப்போது குழம்பு செய்ய வேண்டுமோ, அப்போது இதை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை
30 பூண்டு பற்கள்
10 காய்ந்த மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் சீரகம்
1 டேபிள் ஸ்பூன் மல்லி
1 டேபிள் ஸ்பூன் மிளகு
¼ டீஸ்பூன் வெந்தயம்
நெல்லிக்காய் அளவு புளி
அரை டீஸ்பூன் உப்பு
சிறிய அளவு தண்ணீர்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை சேர்க்கவும். அதில் பூண்டை சேர்த்து வதக்கவும். சிறிய அளவில் நிறம் மாறியதும், அதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். மீண்டும் அதே எண்ணெய்யில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். கருகாமல் வறுக்கவும், அத்துடன் சீரகம், மல்லி, மிளகு, வெந்தயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். தொடர்ந்து அதில் புளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், இதை மிக்ஸியில் சேர்க்கவும். வறுத்தை பூண்டையும் சேர்த்து அரைத்துகொள்ளுங்கள். தற்போது இந்த பேஸ்டை குழம்பு வைக்க வேண்டும் என்று நினைக்கும்போது பயன்படுத்தலாம். எண்ணெய்யில், பூண்டு. அல்லது உங்களுக்கு பிடித்த காய்கறிகளை வதக்கி கொள்ளுங்கள், இந்த பேஸ்டை சேர்த்து, தண்ணீர் சேர்த்து, உப்பு அளவு பார்த்து, குழம்பு வைத்தால் போதும். இந்த பேஸ்ட் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“