ஒரு முறை இப்படி வெங்காய சட்னி செய்து பாருங்க .ருசி நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் 2
சின்ன வெங்காயம் 10
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
வெல்லம் சிறிய அளவு
உப்பு
எண்ணெய்
கடுகு
பூண்டு 5
செய்முறை: மிக்ஸியில், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, மிளகாய் பொடி, வெல்லம் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து பொறிய விடவும், அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து 12 நிமிடங்கள் கிரளர வேண்டும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும்.