ஒரு முறை பன்னீர் வைத்து இந்த பால்கோவா செய்து பாருங்க. ஈசியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
100 கிராம் பன்னீர்
¼ கப் சர்க்கரை
2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
1 கிளாஸ் பால்
நெய் 1 ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பன்னீர், சர்க்கரை, பால் பவுடர் , பால் சேர்த்து, அடுப்பை ஆன் செய்யவும். தொடர்ந்து இதை நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து விடாமல் கலந்துவிடவும். தொடர்ந்து இதற்கு மேலாக நறுக்கிய பாதாமை சேத்துகொள்ளவும். சுவையான பால்கோவா ரெடி