செடிகள் பூத்து செழிப்பாக வளர வீட்டில் இயற்கையான முறையில் மருந்து டானிக் தயாரிக்கலாம். காய்கறி செடிகளுக்கு இதை பயன்படுத்தினால் நன்கு வளரும். டீ தயாரித்து அதை வடிகட்டிய சக்கை எடுக்கவும்.
Advertisment
அதில் தண்ணீர் சேர்த்து வைக்கவும். சர்க்கரை இல்லாமல் டீ போடவும். அரிசி வடிகட்டிய தண்ணீர், வெங்காயத் தோல், அவிக்காத முட்டை ஓடு, 4 வாழைப் பழத் தோல் சேர்த்து தண்ணீர் ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து 5-7 நிமிடம் கொதிக்க விடவும்.
வெங்காயத்தோல், முட்டை ஓடு, வாழைப் பழத் தோலில் அதிக சத்துகள் இருக்கு. அதனால் இது பயன்படுத்தும் போது செடியில் பூக்கள் நன்கு வளரும். அடுப்பை நிறுத்தி வேப்பிலை போடவும். அதன் பின் கலவையை ஆறவிடவும். இதை பின் சக்கைகளை நீக்கி தண்ணீர் மட்டும் எடுக்கவும். அதில் டீ, அரிசி கழுவி வடித்த தண்ணீர் சேர்க்கவும்.
Advertisment
Advertisements
இதன் பின் ஒரு கிளாஸ் தண்ணீடு எடுத்து ஒரு செடிக்கு ஊற்றவும். இது போன்று வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும். நன்கு ரிசல்ட் இருக்கும். பூக்கள் பூக்கத் தொடங்கும்.