இன்னைக்கு முட்டை சமைக்க போறீங்களா? உங்கள் மனதை கவரும் 10 முட்டை ஹேக்ஸ் இதோ!

முட்டை உங்கள் சமையலில் சுவை மற்றும் அளவு இரண்டையும் சேர்க்கிறது. ஆனால் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் முட்டையை திறமையாக கையாளுதல் அவசியம்.

eggs
Interesting 10 egg hacks that will make cooking easier

முட்டைகள் புரதத்தின் சிறந்த மூலம். நீங்கள் முட்டை சாப்பிட்டால், ஒருபோதும் பசியுடன் தூங்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் மிகவும் சோர்வாக இருந்தாலும், உணவு சமைக்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும், நீங்கள் எப்போதும் ஒரு கடாயில் முட்டையை உடைத்து தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். 

முட்டை உங்கள் சமையலில் சுவை மற்றும் அளவு இரண்டையும் சேர்க்கிறது. ஆனால் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் முட்டையை திறமையாக கையாளுதல் அவசியம்.

உங்கள் வாழ்க்கையை எளிதாக்க சில சுவாரஸ்யமான முட்டை ஹேக்குகள் இங்கே உள்ளன!

1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு முட்டைகளை வைத்து கொதிக்க அனுமதிக்கவும். இந்த தண்ணீரில் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்க்கவும். இது காரத்தன்மையை அதிகரித்து முட்டைகளை உரிக்க எளிதாக்கும்.

2. கண்ணாடி டம்ளரில் பாதியளவு நீர் நிரப்பவும். ஒரு முட்டையை எடுத்து தண்ணீருக்குள் விடவும். அது நேராக கீழே சென்றால், முட்டை புதியது என்று அர்த்தம். ஆனால், முட்டை மிதந்தால், அது கெட்டுப்போன ஒன்றாகும்.

3. முட்டையை உடைத்து கிண்ணத்தில் ஊற்றவும். வெற்று தண்ணீர் பாட்டிலை எடுத்து அதன் வாயை, மஞ்சள் கருவின் மேல் வைத்து, பாட்டிலை லேசாக அழுத்தவும். மஞ்சள் கரு எந்த பிரச்சனையுமின்றி உங்கள் பாட்டிலுக்குள் செல்லும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்.

4. உங்கள் ஐஸ் க்யூப் ட்ரேயைப் பயன்படுத்தி முட்டைகளை உறைய வைத்து, சேமிக்கவும், அவை நீண்ட காலம் நீடிக்கும்.

5. ஒரு முட்டையை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் முட்டையை உடைத்து, அதை மூடி வைக்கவும். ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்யுங்கள், உங்களின் போச்ட் முட்டைகள் (poached egg) பரிமாற தயாராக இருக்கும். நீங்கள் ஒரு கண்ணாடி தட்டில் முட்டைகளை உடைத்து, அதை மற்றொன்றால் மூடி, பின்னர் மைக்ரோவேவ் செய்யலாம்.

6. மஃபின் டின்களில் முட்டைகளை உடைத்து மைக்ரோவேவ் அவனில் வைக்கவும். நிமிடங்களில் முட்டை தயாராகிவிடும்! நீங்கள் அவற்றை சாண்ட்விச்சில் பயன்படுத்தலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம்.

7. சரியான ஸ்க்ரெம்ப்ல்டு முட்டைகளுக்கான ஹேக், முட்டைகளை கடாயில் சமைப்பதற்கு முன் சல்லடை செய்வதாகும். அவற்றைப் பிரிப்பதன் மூலம் முட்டைகளில் உள்ள தேவையற்ற ஈரப்பதம் நீங்கும்.

8. முட்டை தோசை செய்யும் போது முதலில் தோசை செய்து அதன் மீது முட்டையை விரிப்பது வழக்கம். அதற்கு பதிலாக, மாவில் முட்டையை கலந்து சமைக்கவும். அது மிகவும் பஞ்சுபோன்றதாக மாறும். மேலும் எந்த கிரேவி அல்லது சட்னியுடன் நன்றாக இருக்கும்.

9. முட்டையை தண்ணீரில் கொதிக்க வைக்கும்போது, ஒரு டீஸ்பூன் எண்ணெயை சேர்த்து, 10 நிமிடங்களுக்கு மேல் முட்டைகளை வேகவைக்கவும். இது அவற்றில் விரிசல்களைத் தடுக்க உதவுகிறது.

10. முட்டைகளை வேகவைத்து குளிர்ந்த பிறகு மெதுவாக உடைப்பது எளிதாக  உரிக்க உதவுகிறது. மேலும் அவற்றை மெதுவாக உடைத்து, பின்னர் உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்கவும்.

அடுத்த முறை உணவைச் செய்யும்போது இந்த விரைவான மற்றும் எளிதான முட்டை ஹேக்குகளை முயற்சிக்கவும்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Interesting 10 egg hacks that will make cooking easier

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express