பெரும்பாலான தொழில்முறை சமையல் நிபுணர்கள் பயன்படுத்தும் ஆனால் அரிதாகவே வெளிப்படுத்தும் சில சமையல் ஹேக்குகள் இங்கே உள்ளன. அவை நமது சமையலறை பேரழிவுகளைக் காப்பாற்ற உதவும்!
சஞ்சீவ் கபூர் (Sanjeev Kapoor)
உங்கள் தோசை ஏன் பேப்பர் தோசை போல் மிருதுவாக இல்லை என்று யோசிக்கிறீர்களா? உங்கள் தலைசிறந்த படைப்பு அனைவரையும் ஆரவாரம் செய்வதை உறுதிப்படுத்த கபூரின் நிபுணர் உதவிக்குறிப்பு இதோ. தோசை மாவை அரைக்கும்போது ஒரு முஷ்டி முழுக்க போஹாவைச் சேர்க்கவும்.
ஜார்ஜ் கலோம்பரிஸ் (George Calombaris)
மென்மையான வேகவைத்த முட்டை எந்த உணவிற்கும் பர்ஃபெக்ட் ஆக இருக்கும். ஆனால் சரியான மென்மையான வேகவைத்த முட்டையை உருவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல.
மாஸ்டர்செஃப் ஜட்ஜ் மற்றும் பிரபல செஃப் கலோம்பரிஸ், உங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நிரப்பும் அந்த சில தந்திரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:
அறை வெப்பநிலையில் இருக்கும் முட்டைகளைப் பயன்படுத்தவும், பிரிட்ஜில் இருந்து நேராக எடுத்து பயன்படுத்தக்கூடாது. குளிர்ந்த முட்டைகளை கொதிக்கும் நீரில் சேர்க்கும் போது வெப்பநிலையில் ஏற்படும் தீவிர மாற்றம் முட்டை ஓட்டில் விரிசலை ஏற்படுத்தும்.
முட்டைகளைச் சேர்ப்பதற்கு முன் எப்போதும் தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருங்கள், இல்லையெனில் நீங்கள் அதை உரிக்க முயற்சிக்கும்போது ஓடு, முட்டையின் வெள்ளைக்கருவில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
தாமஸ் ஜக்காரியாஸ் (Thomas Zacharias)
பாம்பே கேன்டீனின் செஃப் தாமஸ் ஜக்காரியாஸ், தனிமையில் வாழ்ந்து, ஒருவருக்கு மட்டும் சமைப்பவர்களைத் துன்புறுத்தும் கேள்விக்கு பதிலளிக்கிறார்: "உணவை வீணாக்காமல் அல்லது சமையலறையில் மணிக்கணக்கில் உழைக்காமல், எனது தட்டில் பல்வேறு வகைகளை நான் எப்படி வைத்திருக்க முடியும்?"
கொஞ்சமாக சமைப்பது அல்லது வார இறுதியில் மொத்தமாக சமைப்பது இதற்கு பதில் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் ஜக்காரியாஸ் வித்தியாசமான, சிரமம் குறைவான பாதையில் செல்ல விரும்புகிறார் - "நானும் என் ஒருவருக்கு மட்டும் சமைக்கிறேன், ஆனால் நான் செய்வது ஒரு நாளைக்கு ஒரு உணவை சமைப்பதுதான், எனக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு போதுமானது" என்று அவர் கூறுகிறார்.
எனவே, இன்று பருப்பு, நாளை சாதம், மறுநாள் கோழிக்கறி, அதற்கு அடுத்த நாள் காய்கறி சார்ந்த உணவை சமைக்கவும். இந்த வழியில் நீங்கள் சமையலறையில் மணிநேரங்களைச் செலவிடாமல் தினமும் மெனுவில் ஒரு புதிய சேர்த்தலைப் பெறுவீர்கள், மேலும் நீங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டியதில்லை என்பதால் எதுவும் வீணாகாது என்பதையும் இது உறுதி செய்கிறது.
அலெக்ஸ் குர்னாசெல்லி Alex Guarnaschelli
ஒவ்வொரு சமையல்காரருக்கும் அவர்களின் வாழ்க்கையில் அந்த ஒரு தருணம் உண்டு, அவர்கள் ஒரு வாய்ப்பைப் பெற முடிவு செய்யும் போது, இறுதியில் சாஸ் சூடாகி பானை முழுவதும் நிரம்பி வழியும்.
நியூயார்க்கில் உள்ள செஃப் குர்னாஷெல்லி’ ஒரு தானிய சாக்லேட் அல்லது கிரீம் சாஸை எவ்வாறு மீட்பது என்பது தெரியும். அதிக கிரீம் அல்லது வெண்ணெய் சேர்க்க வேண்டாம், பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு. அதற்கு பதிலாக, ஒரு சில ஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் கலக்கவும், இது அதிகப்படியான கொழுப்புப் பொருட்களை சமன் செய்து மற்றும் சரியான விரைவான தீர்வாக செயல்படுகிறது.
கோர்டன் ராம்சே (Gordon Ramsay)
ஒருவரிடமிருந்து நீங்கள் சமையல் குறிப்புகளை கண்டிப்பாக கற்க வேண்டும் என்றால், அது தொலைக்காட்சியில் பயமுறுத்தும் செஃப் ராம்சே தான். ஒருவேளை அவர் எப்போதாவது உங்கள் சமையலறையில் நுழைந்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்களா அல்லது அசிங்கமாக அழுகிறீர்களா என்பதை இந்த ஹேக்குகள் தீர்மானிக்கும்.
ராம்சே சொல்லும் மிகவும் எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள ஹேக்- நீங்கள் சில சூடான மிளகுத்தூள் நறுக்கிய பிறகு. உங்கள் விரல்களில் அதன் காரம் நீடித்திருக்கும். பிறகு மறந்து உங்கள் கண்களை மிளகாய் விரலால் தேய்த்துவிட்டு, தலையில்லாத கோழியைப் போல ஓடிக்கொண்டே இருக்க விரும்பவில்லை என்றால், புதிய எலுமிச்சை சாறுடன் உங்கள் கைகளை கழுவினால் போதும்.
நேஹா தீபக் ஷா (Neha Deepak Shah)
நீங்கள் மக்களை அழைத்து, ஏப்ரன் –ஐ அணிந்து, உங்கள் சமையலில் அனைவரையும் மகிழ்விக்க தயாராக இருக்கும்போது, உங்கள் ரெசிபிக்கு தேவையான முக்கியப் பொருட்களில் ஒன்று உங்களிடம் இல்லை என்பதை உணர்ந்தால்? மாஸ்டர்செஃப் இந்தியா புகழ் நேஹா தீபக் ஷா அத்தகைய ஒரு தருணத்திலிருந்து நம்மை மீட்க இங்கே இருக்கிறார்.
நீங்கள் பேக்கிங் செய்கிறீர்கள் என்றால், அதற்கு மோர் தேவைப்படுகிறது என்றால். ஒருவேளை அந்த நிமிடம் உங்களிடம் மோர் இல்லையென்றால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், வழக்கமான பால் சேர்க்கலாம். ஆனால் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்த பிறகு!
இதுபோல இன்னும் உலகம் முழுவதும் இருந்து பிரபல செஃப்கள் உங்கள் சமையலை எளிதாக்கும் பல சுவாரசியமான ஹேக்ஸ்களை பகிர்ந்துள்ளனர். அதையெல்லாம் அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.