Advertisment

விநாயகர் சதுர்த்தி சிறப்பு: வினை தீர்க்கும் விநாயகரின் பல முகங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி : கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர்.விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது.

Advertisment

நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே அருளும் பொருட்டு, தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் வீற்றிருக்கிறார்.

தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். அதாவது 'வி’ என்றால் இதற்கு மேல் ஒன்றும் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

publive-image

விநாயக சதுர்த்தி :

இப்படி விநாயகரின் சிறப்புக்களை சொல்லிக் கொண்டே செல்லலாம். இன்று (செப்டம்பர் 13) உலகம் முழுவது விநாய சதுர்த்தி கொண்டாட்டங்கள் கலைக்கட்ட துவங்கி விடும். இந்த நள்ளாளில் விநாயகரின் சிறப்பு, வழிபாடு பற்றி அரிய தொகுப்பு இதோ உங்களுக்காக...

1. சித்தி புத்தி விநாயகர்:

விநாயகர் தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று தான் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள். இவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் கொடுக்கும் பண்புகளையே தன்னுடைய இரண்டு மனைவிகளாய் கொண்டு சித்தி புத்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

2. டிரான்ஸ்ஃபர் விநாயகர்:

திருப்பூரிலிருந்து கோவை செல்லும் வழியில் உள்ள விநாயகரிடம் பணி இடம் மாறுதல் கேட்டு வேண்டி, அது கிடைப் பதால் அவரை 'டிரான்ஸ்ஃபர் விநாயகர்' என்கிறார்கள்.

publive-image

3. யானை வாகனம் :

திருச்செந்தூரில் உள்ள கோயிலில் விநாயகர் யானை வாகனத்தில் விளங்குகிறார்.

4. கொழுக்கட்டையின் :

மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக் கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளி யில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

5. பெண்கள் வழிபடாத விநாயகர் :

திரியம்பக் என்ற இடத்தில் கணபதி கோமணதாரியாக இருக்கிறார். இவரைப் பெண்கள் தரிசிக்க அனுமதிக்கப் படுவதில்லை.

Vinayagar Chathurthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment