கண்ணீர் இல்லாமல் வெங்காயம் வெட்ட.. உருளைக்கிழங்கு உடனே வேக.. குக்கிங் ஹேக்ஸ் இதோ!

ஒரு அதிசய சமையல்காரராக மாறுவது மற்றும் மின்னலைப் போல விரைவாக சமைப்பது எப்படி என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா?உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த சில எளிதான சமையல் ஹேக்குகள் இங்கே உள்ளன.

இன்றைய வேகமாக நகரும் வாழ்க்கையில், சமையல் என்பது கடினமான வேலையாக மாறிவிட்டது. இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் சமையல் நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுவையில் எந்த சமரசமும் இல்லாமல் உங்கள் சமையல் திறன்களை மேம்படுத்தவும் உதவும்!  ஒரு அதிசய சமையல்காரராக மாறுவது மற்றும் மின்னலைப் போல விரைவாக சமைப்பது எப்படி என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா? வாயில் நீர் ஊறவைக்கும் உணவுகளைத் தயாரிக்கும் போது நேரத்தை மிச்சப்படுத்த சில எளிதான சமையல் ஹேக்குகள் இங்கே உள்ளன.

உங்கள் காய்கறிகளை தயார் செய்தல்

காய்கறிகள் நம் அன்றாட உணவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இருப்பினும், உங்கள் சமையல் நேரத்தில் பாதி’ காய்கறிகளை நறுக்குவதில் செலவழிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. உங்கள் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும் வண்ணமயமான காய்கறிகள் இல்லாமல் சுவையான உணவுகள் முழுமையடையாது. சமையலை உங்களுக்கு மிகவும் எளிமையாக்க, உங்கள் காய்கறிகளை விரைவாக நறுக்குவதற்கான சில இந்திய சமையலறை குறிப்புகள் இங்கே உள்ளன:

முதலில், காய்கறிகளை நறுக்கும் போது பலகை நழுவாமல் இருக்க உங்கள் கட்டிங் போர்டின் கீழே ஈரமான துணியை வைக்கவும்.

பூண்டை உரிப்பது கடினமான பணி. ஆனால் நீங்கள் பூண்டை மைக்ரோவேவ் செய்து சுமார் 30 வினாடிகள் கழித்து உரிக்க முயற்சித்தால், தோல் மிகவும் சுலபமாக வந்துவிடும்.

மற்றொரு சுவாரஸ்யமான ஹேக்! உரிக்கப்படுவதில் மிகவும் பொதுவான பிரச்சனை என்னவென்றால், உங்கள் அறையில் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும் போது, வெங்காயம், பூண்டு உறித்தால் அவை அறை முழுவதும் பரந்து குப்பையாகி விடும். ​​ஒரு கப் தண்ணீரை எடுத்து அதில் உரித்த தோலை போடுங்கள். இப்போது நீங்கள் மகிழ்ச்சியுடன் ஃபேன் கீழ் அமர்ந்து பூண்டை உரிக்கலாம்!

காய்கறிகளை துண்டாக்கவும், சாலட் தயாரிக்கவும் நீங்கள் ஃபுட் ப்ராஸசர் பயன்படுத்தலாம். அவை பயன்படுத்த மிகவும் எளிதானவை மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

உருளைக்கிழங்கை வேகவைப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும். கத்தியின் உதவியுடன் உருளைக்கிழங்கை கீறிவிடுங்கள் அல்லது குத்துங்கள். துளைகளின் வழியே வெப்பம் ஊடுருவி உருளைக்கிழங்கு சிறிது நேரத்தில்  மென்மையாக்க உதவும்!

எங்கும் வெங்காயம்

வெங்காயம்’ ஒவ்வொரு இந்திய உணவின் ஆத்மா! இருப்பினும், வெங்காயத்தை நறுக்குவது கண்ணீர் வரவழைக்கும். அவற்றை ஸ்டைலாக வெட்ட சில சமையல் ஹேக்குகள் இங்கே உள்ளன.

உங்கள் கண்களில் எரிச்சலைத் தவிர்க்க வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் சுமார் 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.

மேலும் வெங்காயத்தை தோல் உரித்து தண்ணீரில் போடலாம். இதனால் கண்களில் எரிச்சல் இருக்காது.

ஆனியன் சாப்பர்ஸ் (onion choppers) உங்கள் வேலையை எளிதாக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு வெங்காயத்தை, சாப்பரில் வைத்து, பட்டனை தட்டினால் மட்டும் போதும். வெங்காயம் தயாராகிவிடும்.

ஆச்சரியப்படும் விதமாக, வெங்காயத்தை நறுக்குவதில் ஹேர் பிக்(பெரிய பல் கொண்ட சீப்பு) உங்களுக்கு உதவும். வெளிப்புற தோலை உரித்து, வெங்காயத்தில் ஹேர் பிக் துளைத்து, ஹேர் பிக்கிற்கு இடையே உள்ள இடைவெளியில் வெங்காயத்தை வெட்ட ஆரம்பித்து, செயல்முறையை வேகப்படுத்துங்கள்!

உங்கள் பழங்களை சேமிக்கவும்

பழங்கள் வைட்டமின்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகளின் சிறந்த மூலமாகும். இருப்பினும், அவற்றை வெட்டுவது மிகவும் கடினமான பணியாகும், குறிப்பாக அன்னாசி அல்லது மாதுளை பழங்களை கையாளும் போது. வெட்டப்பட்ட பழங்கள் பழுப்பு நிறமாகாமல் இருக்க உலர்ந்த மற்றும் காற்று புகாத டப்பாவில் அதை சேமியுங்கள்.  

ஆப்பிள்களை வெட்டும் போது அது பழுப்பு நிறத்துக்கு மாறுகிறது  இதைத் தடுக்க, சேமித்து வைக்கும் முன் ஆப்பிள் துண்டுகளை உப்பு நீரில் நனைக்கவும் அல்லது எலுமிச்சை சாற்றை தடவுவம். இந்த வழியில், நீங்கள் ஆக்ஸிஜனேற்ற செயல்முறையைத் தவிர்த்து, ஆப்பிள் பழுப்பு நிறமாவதை தடுக்கலாம்.

பழங்களை குளிர்சாதன பெட்டியில் அதிக நேரம் சேமிக்கும் போது, ​​பழங்களை ஒரு அலுமினிய ஃபாயில் தாளில் போர்த்தி அல்லது துணி கவரில் வைக்கவும். இது பழங்களின் ஆயுளை அதிகரிக்கிறது. 

வாழைப்பழங்களை தனித்தனியாக பிரிட்ஜில் வைப்பதன் மூலம் அதை நீண்ட காலம் சேமிக்கலாம்.

பழங்கள் விரைவாக பழுக்க, காற்று புகாத டப்பாவில் வைக்கவும். பழங்களை ஒரு நீண்ட அரிசி டிரம்மில் வைப்பது பழமையான தொழில்நுட்பம். இதனால் பழங்கள் வழக்கத்தை விட வேகமாக பழுக்க வைக்கும். 

எஞ்சியவற்றிலிருந்து செல்வம்

சரியான அளவு உணவை சமைப்பது சவாலானது. மீதமுள்ள உணவை என்ன செய்வது என்று நீங்கள் குழப்பமடையலாம். கவலை வேண்டாம்! நீங்கள் தயாரிக்கக்கூடிய சில சுவையான சமையல் வகைகள் இங்கே:

இட்லி உப்புமா: இந்த டிப்ஸ் உங்களுக்கு புதிதில்லை. ஏனெனில் சூர்ய வம்சம் படத்துக்கு பிறகு, இட்லி உப்புமா தமிழக மக்களின் விருப்ப உணவாகி விட்டது. ஒருவேளை உங்களுக்கு இட்லி உப்புமா செய்வதில் சந்தேகம் இருந்தால் இதோ குறிப்பு:

உங்களிடம் கூடுதல் இட்லி இருந்தால், அவற்றை துண்டுகளாக வெட்டி வெங்காயம் மற்றும் குடைமிளகாயுடன் ஒரு பாத்திரத்தில் வதக்கவும். இதில் சில மசாலா சேர்க்கவும். கடாயில் சிறிது நேரம் விட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். உங்களின் சுவையான உப்புமா தயார்!

மிக்ஸ்ட் வெஜ் பரட்டோ: இரவு உணவிற்குப் பிறகு உங்களிடம் சில பராத்தா/சப்பாத்திகள் மிச்சமிருந்தால், அவற்றைப் பயன்படுத்தி மறுநாள் காலை ஒரு சூப்பர் சுவையான காலை உணவைத் தயாரிக்கலாம்.

கடாயை சூடாக்கி சிறிது இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். இதில் உங்களுக்கு விருப்பமான நறுக்கிய காய்கறிகள் மற்றும் பராட்டா துண்டுகளையும் சேர்க்கவும். தேவையான மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உங்கள் விரைவான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட தயாராக உள்ளது!

அடுத்தமுறை இந்த எளிய சமையல் ஹேக்குகளை பயன்படுத்தி, சமையல் செயல்முறையை எளிதாக்குங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Interesting indian cooking hacks that make your cooking very easy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com