நேற்று (செப். 22) உலகளாவிய மகள்கள் தினம் கொண்டாடப் பட்டது. தனது சிறு வயது மகள்களை நினைவுகூறும் விதமாக பல பெற்றோருகளும் தங்களது ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்த்தலங்களில் சிறு வயது போட்டோக்களை ஷேர் செய்து வந்தனர்.
இதிலும், குறிப்பிடும் வகையாக இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ட்வீட் இருந்தது.
அந்த ட்வீடில் அமைந்துள்ள புகைப்படம் , பெரிய மலையின் பின்னணியில் அந்த கால அனலாக் காமிராவில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த ட்வீடில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதவாது, "மகள்களை பற்றி இன்னும் அதிகமாக சொல்ல முடியும். மகள் என்பவள் ஒரு நண்பர், தத்துவஞானி மற்றும் வழிகாட்டி. இங்கே, நானும் எனது மகளும் எடுத்த புகைப்படத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமின் மகள் பரக்கலா தற்போது தி இந்து பத்திரிக்கையில் எழுத்தாசிரியராக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவும் தனது 16 வயது மகள் மிராயா வாத்ராவின் புகைப்படத்தை நேற்று ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டிருப்பதவாதுகுறிப்பி ," மகள்கள் நாள் என்று தனியான ஒரு நாள் இருப்பது என்று யாருக்குத் தெரியும், ஒவ்வொரு நாளும் மகள்கள் நாட்கள் என்று தான் இது வரை நான் நினைத்து வந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தியின் புதல்வி.