நாய் வெறும் விலங்கு மட்டும் அல்ல, அது ஒரு உணர்வு. நம்மில் பலருக்கு அவை வாழ்க்கை.
ஆனால் எது அவர்களை அவ்வாறு ஆக்குகிறது?
அன்பாகவும், மென்மையாகவும், நம் நிபந்தனையற்ற அன்பைத் தூண்டுவதாகவும் இருப்பதைத் தவிர, நாய்களை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தும் பல தனித்துவமான பண்புகள் உள்ளன.
ஒரு நாய் ஆராய்ச்சியாளர், விலங்கு நடத்தை ஆலோசகர் மற்றும் கேனோபில் (நான் நாய்களை நேசிக்கிறேன் என்று அர்த்தம்) ஆகிய நான், நாய்களை மிகவும் சிறப்பானதாக மாற்றும், சில பண்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.
நாய் ஒரு ஹைபர் சோஷியல்
எந்தவொரு புதிய உயிரினத்தையும் சந்திப்பதில் எக்கச்சக்க மகிழ்ச்சி அடையும் அந்த கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்களை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஹைபர் சோஷியல் நாய், மற்ற வீட்டு நாய்களுடன் கூட சில முக்கிய மரபணு வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
மிகவும் கவர்ச்சிகரமானதாக, இந்த மரபணு வேறுபாடுகள் வில்லியம்ஸ்-பியூரன் நோய்க்குறி (Williams-Beuren syndrome) எனப்படும் மரபணு நிலையில் உள்ளவர்களில் ஹைபர் சோஷியலிட்டியுடன் தொடர்புடைய மரபணுவின் பகுதியில் உள்ளன.
இந்த நோய்க்குறி உள்ளவர்கள் எதிர்மறையான உடல்நல விளைவுகளை அனுபவித்தாலும், அவர்கள் மிகவும் திறந்த மனதுடன் நேசமானவர்களாக இருப்பார்கள்.
சிறு வயதிலிருந்தே, நாய்க்குட்டிகள் மனித முகத்தில் ஈர்க்கப்படுகின்றன. (File/Express Photo by Praveen Khanna)
எல்லா நாய்களும் இந்த ஹைபர் சோஷியல் வகைக்குள் வராது.
இருப்பினும் வளர்ப்பு நாய்கள் வெவ்வேறு இனங்களுடனும், மிகவும் மகிழ்ச்சியுடன் இணக்கமாக வாழ முடியும். இதுவே நம் வாழ்வில் நாய்களை இணைப்பதை எளிதாக்குகிறது.
நாய்கள் நம்மைப் புரிந்துகொள்கின்றன
மனிதர்கள் பல தலைமுறைகளாக நாய்களை வளர்க்கிறார்கள். பல சமயங்களில், நமக்கு துணையாக இருப்பது உட்பட பலவிதமான வேலைகளில் அவை நமக்கு உதவுகின்றன.
நமக்கு சிறுவயதிலிருந்தே, நாய்க்குட்டிகளை பிடிக்கிறது. அவை மனிதர்களுக்கு அடிபணிந்து நமது வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன.
நாய்களும் நம் பார்வையைப் பின்பற்றக் கற்றுக்கொள்கின்றன, அவை நமது முகத்தின் இடது பக்கத்தைப் பார்க்க அதிக நேரம் செலவிடுகின்றன. (இது நமது பார்வையில் வலது பக்கமாக இருக்கும்). நாம் எப்படி உணர்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்க நாய்கள் நம் முகங்களைப் படிக்கின்றன என்பதை இது காட்டுகிறது.
நாய்கள் எண்ணற்ற வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன.
வளர்ப்பு நாய்களைப் போல வேறு எந்த உயிரினமும் இவ்வளவு பெரிய வடிவங்கள் மற்றும் அளவுகளில் இல்லை. பூனைகளோ குதிரைகளோ கூட ஒரே மாதிரியான பன்முகத்தன்மையைக் காட்டுவதில்லை.
மிகப்பெரிய நாய்கள் சிறியதை விட 25 மடங்கு அதிக பெரிதாக இருக்கலாம்!
அதையும் தாண்டி, நிமிர்ந்த காதுகள், தொங்கும் காதுகள், வால் உள்ளவை, வால் இல்லாதவை, குட்டை கால்கள், நீண்ட கால்கள், பெரிய மூக்கு, சின்ன மூக்கு மற்றும் பலவிதமான கோட் வண்ணங்கள், நீளங்கள் மற்றும் அமைப்புகளுடன் கூடிய நாய்கள் உள்ளன.
நாய்களைப் பொறுத்தவரை, இந்த பெரிய மாறுபாடு, தங்கள் சொந்த வகையைப் புரிந்து கொள்ளும்போது மற்ற விலங்குகளை விட அவை அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டாக, புல்டாக் போன்ற மிகவும் வித்தியாசமான குறுகிய முகம் கொண்ட இனத்தைச் சந்திக்கும் போது, மற்ற இன நாய்களின் உரிமையாளர்கள் தங்கள் நாயை சற்று குழப்பமாகவோ அல்லது தற்காப்பாகவோ காணலாம்.
நாய்களின் அளவு மற்றும் வடிவம் அவற்றின் நடத்தை மற்றும் அனுபவங்களை எவ்வாறு பாதிக்கலாம். உதாரணமாக, நீண்ட மூக்கு கொண்ட நாய்கள் கூர்மையான பார்வை கொண்டவை, அதே நேரத்தில் இலகுவான கட்டமைப்பைக் கொண்ட நாய்கள் அதிக ஆற்றலுடன் இருக்கும்.
மனிதர்களுடனான நாய்களின் இணைப்பு மிகை சமூகத்திற்கு அப்பாற்பட்டது. (Source: Getty Images/ Thinkstock)
விலங்கு உதவி சிகிச்சையில் (animal-assisted therapy) நாய்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன, அவை குழந்தைகள் படிக்க கற்றுக்கொள்ளவும், பதட்டத்தை போக்கவும் உதவுகின்றன.
புத்திசாலித்தனம், தன்னலம் இல்லாமை அல்லது இயல்பான அன்பு போன்ற மனிதர்களில் நாம் மதிக்கும் சில பண்புகளுக்கு நாய்கள் சிறப்பு வாய்ந்தவை.
அவை எங்கு சென்றாலும் சமூக நல்லிணக்கத்தை பேணக் கூடியவை, உணர்வுமிகுந்த வாழ்க்கையைக் கொண்டுள்ளவை. அவை வெவ்வேறு இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன மற்றும் அவற்றின் சொந்த இனங்களுக்கு வெளியே பிணைப்புகளை உருவாக்க முடியும்.
மேலும் மனிதர்களாகிய நமக்கு இது போதும்…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil