சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று (அக்.11) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/GBL91i4GgUrjufpN4swy.jpeg)
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உறுதி வாசிக்க பள்ளி மாணவிகள் மற்றும் சமூக நலத்துறை பெண் அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, பள்ளி மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/Meatv9fsjV7ZDDP8E7Cd.jpeg)
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு வண்ண பேண்ட்(Band) யை கையில் கட்டிவிட்டு இனிப்புகள் மற்றும் பூங்கொத்தை வழங்கி சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை ஆட்சியர் தெரிவித்துக் கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/GHfgnqwi7yJbgXcGcrdu.jpeg)
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“