/indian-express-tamil/media/media_files/2025/03/07/dHtbL5keJqcz7zdG2j5N.jpg)
சர்வதேச மகளிர் தினம் 2025: ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினம் உலகெங்கிலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்துகிறது. இதில் பெண்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Happy Women’s Day 2025: 10 inspirational International Women’s Day quotes
1900 களின் முற்பகுதியில் இருந்து, சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளின் உலகளாவிய கொண்டாட்டமாக இருந்து வருகிறது.
இந்த நாள் பெண்களின் சமத்துவத்தை உணர்த்துவதற்கான தினமாக அமைகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெண்களின் பங்களிப்பை சிறப்பிக்கும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டில் 'செயலை துரிதப்படுத்துங்கள்' என்ற அடிப்படையில் கொண்டாடப்படவுள்ளது.
இந்த சூழலில் உங்கள் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய பெண்களுக்கு நீங்கள் பகிர்ந்து மகிழக் கூடிய சர்வதேச பெண்கள் தின வாழ்த்து செய்திகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
"அனைத்துமே தவறாக சென்றாலும் வலிமையுடன் இருங்கள். மகிழ்ச்சியான பெண்களே, அழகான பெண்கள் என நான் நம்புகிறேன். நாளை என்பது மற்றொரு நாள் தான். அற்புதங்கள் நிகழும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" - ஆட்ரி ஹெப்பர்ன்
"மற்றவர்களின் கருத்து மற்றும் அவர்கள் வாழ்க்கையின் படி பெண்மையாக வாழாதீர்கள். பெண்மை என்பதே நீ தான்!" - வயோலா டேவிஸ்
"நாம் மௌனமாக இருக்கும் போதுதான் நம்முடைய குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்." - மலாலா யூசுப்சாய்
"நமது பிரச்சனை என்னவென்றால், நாம் எப்படி இருக்கிறோம் என்று அங்கீகரிப்பதை விட, நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அது பரிந்துரைக்கிறது" - சிமாமண்டா கோசி ஆதிச்சி
"எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாழ்க்கையின் கதாநாயகியாக நீங்கள் இருங்கள்!" - நோரா எஃப்ரான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.