Happy International Workers Day 2023 Wishes Images, Quotes, Messages, Status: 2023 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நீங்கள் சக பணியாளர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர விரும்பும் மேற்கோள்கள், வாழ்த்துச் செய்திகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தொகுப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
இந்தியாவில், 1923 ஆம் ஆண்டு மே 1-ம் தேதி, ஹிந்துஸ்தானின் தொழிலாளர் கிசான் கட்சி தொடங்கி, தோழர் சிங்காரவேலர் கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்கிய பிறகு, மே தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. (வடிவமைத்தவர்: கார்கி சிங்)

சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது தொழிலாளர் தினம் என்பது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை கௌரவிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இது மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாள் 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் சிறந்த வேலை சூழ்நிலையுடன் ஒரு நாளின் வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்கக் கோரி தெருக்களில் இறங்கி போராடியபோது உருவானது.
இந்தியாவில், 1923-ம் ஆண்டு மே 1-ம் தேதி, ஹிந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சியைத் தொடங்கி, தோழர் சிங்காரவேலர் கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்கிய பிறகு, மே தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இரண்டு கூட்டங்களில் – ஒன்று டிரிப்ளிகேன் கடற்கரையிலும், இரண்டாவது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையிலும் – சென்னை மாகாணத்தில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட சிங்காரவேலர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளுக்காக போராடிய அவர், தொழிலாளர் தினத்தில் அனைவருக்கும் தேசிய விடுமுறையை அரசு அனுமதிக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
2020 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நீங்கள் சக பணியாளர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர விரும்பும் மேற்கோள்கள், வாழ்த்துச் செய்திகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தொகுப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

- உழைப்பு என்பது மனித இனத்தின் கண்ணியம், படைப்பாற்றல் சிறப்பை வெளிப்படுத்தும் ஏணி. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

- ஒரு தொழிலாளி படைப்பாளியாக இருக்கிறான். தொழிலாளி ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பெரிய சொத்து. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

- உண்மையான சுதந்திரம் கடின உழைப்பில் இருக்கிறது. விடாமுயற்சியில்தான் ஓய்வுக்கு அர்த்தம் இருக்கிறது. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

- தொழிலாளர்களைக் கொண்டாடுங்கள்; ஒவ்வொரு தேசத்தின் இருப்பையும் வளர்ச்சியையும் கொண்டாடுங்கள். தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

- கடின உழைப்பு உங்களை ஒருபோதும் தோல்வியுறச் செய்யாது. மகிழ்ச்சியான தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“