/indian-express-tamil/media/media_files/2025/06/21/covai-yoga-2025-06-21-11-03-26.jpg)
சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு: கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் யோகா செய்து அசத்தல்
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட கல்வித்துறை மற்றும் இமயம் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தியது. பல்வேறு யோகா கலைகள் குறித்து மாணவ, மாணவிகள் அறியும் வகையில் யோகா கலை நிபுணர்கள் பயிற்சி வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணி மாலா வரவேற்று பேசினார். உலக சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் வழக்கறிஞர் திரிலோக சந்தர் இமயம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மீனாட்சி முன்னிலை வகித்தனர். யோகா தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் கோமதி பேசினார். பள்ளி பருவத்திலே மாணவ, மாணவிகள் யோகா கலையை நாள்தோறும் பயிற்சி மூலம் கற்று உடல், மனம், ஆரோக்கியம் ஒருநிலைப்படுத்த வேண்டும். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த மனிதராக உருவாக்கும் யோகா பயிற்சி கற்பதன் மூலம் முழுமையான மனிதராக உணர முடியும். வாழ்க்கையில் லட்சியங்களை அடைவதற்கும் யோகா பயிற்சி மிக முக்கியமானது என்று நிகழ்ச்சிகள் பங்கேற்றவர்கள் பேசினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.