IRCTC Chennai News: ஐஆர்சிடிசி சிறப்பு ரயில் பயணச்சீட்டுகளை தபால் அலுவலகங்கள் மூலமும் முன்பதிவு செய்யலாம். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய ரயில்வே 22 மே 2020 முதல் தபால் நிலையங்களில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதியை திறந்துள்ளது. தபால் நிலையங்கள் தவிர Yatri Ticket Suvidha Kendra (YTSK) உரிமம் பெற்றவர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐஆர்சிடிசி) முகவர்கள் மூலமாகவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு அல்லது ரத்து செய்யும் வசதி மீண்டும் தொடங்கியுள்ளது. ஐஆர்சிடிசி சிறப்பு ரயில்களுக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதி ரயில்வே வளாகங்களில் உள்ள இந்தியன் ரயில்வே கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு (Indian Railways’ computerized Passenger Reservation System -PRS) கவுண்டர்களிலும், முன்பதிவு மையங்களிலும் (reservation centers) மேலும் பொது சேவை மையங்களிலும் நடைபெறுகிறது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
உள்ளூர் தேவை மற்றும் நிலமைகளைப் பொருத்து பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்காக முன்பதிவு கவுண்டர்களை திறப்பது குறித்து மண்டல ரயில்வேயே முடிவு செய்து அறிவிக்க, ரயில்வே அமைச்சரகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள நெறிமுறைகளின்படி, Shramik சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவது மாநில அரசுகளால் தொடர்ந்து கையாளப்படும். இது தவிர இந்தியன் ரயில்வே 15 ஜோடி குளிரூட்டப்பட்ட பயணிகள் ரயில் சேவைகளை இயக்குகிறது. இந்த சிறப்பு 15 ஜோடி குளிரூட்டப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு காலம் 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுடன் கூடுதலாக 200 சிறப்பு பயணிகள் ரயில் சேவைகளும் ஜூன் 1, 2020 முதல் செயல்பட தொடங்கும், என ரயில்வே அமைச்சரகம் கூறியுள்ளது. வரவிருக்கும் சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி ஆப்பில் மே 21 முதல் தொடங்கியது.
Advertisment
Advertisements
இதற்கிடையே சில போலி முகவர்கள் மோசடி வழிகளைப் பயன்படுத்தி சிறப்பு ரயிலகளில் இ-பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு (RPF) வந்த புகாரை அடுத்து, 20 மே 2020 ல் ஒரு சிறப்பு ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 8 ஐஆர்சிடிசி முகவர்கள் உட்பட 14 முகவர்கள் கைது செய்யப்பட்டு ரூபாய் 6,36,727/- அளவில் பயணச்சீட்டுகள் RPF வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil