Advertisment

5 இரவு, 6 பகல்- குறைந்த விலையில் துபாய் டூர் பேக்கேஜ்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு

‘Dazzling Dubai’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த IRCTC துபாய் சுற்றுலா தொகுப்பு 5 இரவுகள் மற்றும் 6 பகல்களைக் கொண்டது.

author-image
WebDesk
New Update
IRCTC

IRCTC Dubai tour package details

சமீபத்திய ஆண்டுகளில், துபாய் இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நகரம் அதன் ஷாப்பிங் மால்கள், அதிநவீன கட்டிடக்கலை மற்றும் ஒரு உயிரோட்டமான இரவு வாழ்க்கைக்கு புகழ்பெற்றது.

Advertisment

தற்போது ஐஆர்சிடிசி (IRCTC) சுற்றுலா பயணிகளுக்காக துபாய் டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் மூலம், சுற்றுலா பயணிகள் துபாய்க்கு மலிவான விலையில் பயணம் செய்யலாம்.

IRCTC துபாய் சுற்றுலா தொகுப்பின் அம்சங்கள்

‘Dazzling Dubai’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த IRCTC துபாய் சுற்றுலா தொகுப்பு 5 இரவுகள் மற்றும் 6 பகல்களைக் கொண்டது.

பிப்ரவரி 12, 2024 மற்றும் பிப்ரவரி 25, 2024 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்து பயணம் தொடங்கும். துபாய் வரை சென்று திரும்பி வருவதற்கான எகானமி வகுப்பு விமான கட்டணம், 3 நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, உணவு, விசா கட்டணங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் ஆகியவை இந்த தொகுப்பில் அடங்கும்.

எவ்வளவு கட்டணம்?

தனியாக பயணம் செய்தால், ஒரு நபருக்கு மொத்த செலவு ரூ.1,16,500 ஆகும்.

இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தால், ஒரு நபருக்கு ரூ.97,800 கட்டணம் செலுத்த வேண்டும். மூன்று பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.95,400 செலுத்த வேண்டும்.

5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தை இருந்தால், படுக்கை தேவை என்றால், 92,600 ரூபாய் செலவாகும். படுக்கை இல்லாமல், ரூ.82,100 செலவாகும்.

பயணத்திட்டம்

நாள் 1: பயணிகள் டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு வருவார்கள். அங்கிருந்து சாலை வழியாக துபாய் செல்வார்கள். அன்று மாலையில், மிராக்கிள் கார்டனையும், துபாய் க்ரீக்கில் உள்ள மிகப்பெரிய தோவ் குரூஸையும் ஒரு பஃபே விருந்துடன் பார்வையிடலாம்.

நாள் 2: சுற்றுலாப் பயணிகள் காலையில் ஹோட்டலை விட்டு வெளியேறி, துபாய் மியூசியம், கோல்ட் சூக், ஸ்பைஸ் சூக், ஜுமேரா, புர்ஜ் அல் அராப், துபாய் ஃபிரேம் மற்றும் அட்லாண்டிஸ் ஹோட்டல் சுற்றிப் பார்க்கலாம். பின்னர், துபாய் மாலுக்குச் சென்று ஷாப்பிங் செய்யலாம், புர்ஜ் கலிஃபாவைப் பார்வையிடலாம்.

நாள் 3: பாரம்பரிய துபாய் சந்தையில் காலையில் ஷாப்பிங் செய்யலாம். அங்கு நேரத்தை செலவிடலாம். பிற்பகலில், பாலைவன சஃபாரிக்கு செல்வார்கள், அதைத் தொடர்ந்து பார்பிக்யூ டின்னர் மற்றும் பெல்லி நடனம் உண்டு.

நாள் 4: துபாயில் உள்ள மிகப் பெரிய மால்களில் ஒன்றான மால் ஆஃப் தி எமிரேட்ஸ்க்குச் செல்லலாம், இதனுடன், மிகப்பெரிய தீம் பார்க்களில் ஒன்றான ஸ்னோ பார்க் சுற்றிப் பார்க்கலாம்.

நாள் 5: சுற்றுலாப் பயணிகள் காலை உணவுக்குப் பிறகு ஹோட்டலை விட்டு வெளியேறி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபிக்கு பயணம் மேற்கொள்வார்.

அங்கு ஷேக் சயீத் மசூதி மற்றும் ஃபெராரி வேர்ல்ட் பார்வையிடுவார்கள். அதன்பின் டெல்லி செல்ல விமான நிலையம் செல்வார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dubai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment