ரயில் டிக்கெட் ‘புக்’ செய்தீர்களா? ரூ830 கோடியை திருப்பித் தரும் ஐ.ஆர்.சி.டி.சி.

IRCTC Ticket Refund Tamil News: நாள்தோறும் சராசரியாக சுமார் 8.5 லட்சம் பயணச்சீட்டுகள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.

IRCTC Tamil Nadu News, IRCTC Chennai News, IRCTC Ticket Refund, இந்தியன் ரயில்வே, சதர்ன் ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி

IRCTC E Ticket Booking: 94 லட்சம் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்ததற்கான இந்த பெரும் கட்டணத் தொகையை இந்தியன் ரயில்வே பயணிகளிடம் திருப்பித் தர உள்ளது. அதே சமயம் அன்றாட பராமரிப்பு மற்றும் பயணச்சீட்டு வசதி மேம்படுத்துவதற்காக பயன்படும் பெயரளவுக்கான convenience fee திருப்பித் தரமாட்டாது என ரயில்வே ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் பயணம் செய்வதற்காக பயணிகள் முன்பதிவு செய்த 94 லட்சம் முன்பதிவு பயணச்சீட்டுகளுக்கான கட்டணமான ரூபாய் 1,490 கோடியை திருப்பித் தர இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. மார்ச் 22 மற்றும் ஏப்ரல் 14 க்கு இடைப்பட்ட காலத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட 55 லட்சம் முன்பதிவுகளுக்கான கட்டணத் தொகையான ரூபாய் 830/- கோடியை தேசிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே திருப்பித்தர உள்ளது, என பிடிஐ செய்திநிறுவனம் ஒரு உயர் ரயில்வே அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

IRCTC Ticket Refund Tamil News: ஐ.ஆர்.சி.டி.சி. ரயில் டிக்கெட் முன்பதிவு

இது தவிர ஏப்ரல் 15 மற்றும் மே 3 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ரயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவுச் செய்யப்பட்ட 39 லட்சம் பயணச்சீட்டு முன்பதிவுகளுக்கான கட்டணமான ரூபாய் 660 கோடியையும் ரயில்வே திருப்பித் தர உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய ரயில்வே தனது பயணிகள் ரயில் போக்குவரத்தை 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமலில் வருவதற்கு மூன்று நாட்கள் முன்னரே அதாவது மார்ச் 22 ஆம் தேதியே ரத்து செய்துவிட்டது. முன்னதாக இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 15 முதல் ரயில் பயணங்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவை தேசிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே நிறுத்தவில்லை. முன்பதிவுக்கான கட்டணம் பயணிகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக தானாக திருப்பி செலுத்தப்படும் என இந்திய ரயில்வே கூறியுள்ளது. அதே நேரம் தங்களது பயணத்திற்கான பயணச்சீட்டை ரயில்நிலைய கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் ஜூலை 31 வரை அதற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை இ – டிக்கெட் (e-tickets) உட்பட எந்தவித முன்பதிவுகளும் அனுமதிக்கப்படாது. அதேநேரம் ஆன்லைன் பயணச்சீட்டு ரத்து செய்யும் வசதி மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைக்கான முழு தொகையும் பயணிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். அதே சமயம் அன்றாட பராமரிப்பு மற்றும் பயணச்சீட்டு வசதி மேம்படுத்துவதற்காக பயன்படும் பெயரளவுக்கான convenience fee திருப்பித் தரமாட்டாது என ரயில்வே ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

குளிரூட்டப்படாத பயண சீட்டுகளுக்கு ரூபாய் 15/- ஐ, convenience fee ஆக ஐஆர்சிடிசி வசூலித்து வந்தது. அதே சமயம் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளுக்கு ரூபாய் 30/- ஐ convenience fee ஆக வசூலித்து வந்தது. கோவிட் -19 பரவலுக்கு முன்பாக நாள்தோறும் சராசரியாக சுமார் 8.5 லட்சம் பயணச்சீட்டுகள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc e ticket booking southern railway irctc ticket refund tamil news

Next Story
”கல்யாணத்துக்கு மட்டுமில்ல மீடியாவுக்கும் வீட்ல ரெட் சிக்னல் தான்” – வி.ஜே.மணிமேகலைVJ Manimegalai skin tanned, manimegalai vijay tv
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com