அடுத்த தலைமுறை பயணத்துக்கு ரெடியா?…. வழிகாட்டுகிறது இந்தியன் ரயில்வே

ஐஆர்சிடிசி (IRCTC) இன் டிஜிட்டல் நடவடிக்கைகள் பயண சீட்டு பெறுவது மற்றும் பயணம் செய்வதை எளிமையாக்குகிறது.

By: February 16, 2020, 2:46:47 PM

ஐஆர்சிடிசி (IRCTC) இன் டிஜிட்டல் நடவடிக்கைகள் பயண சீட்டு பெறுவது மற்றும் பயணம் செய்வதை எளிமையாக்குகிறது.

டிஜிட்டல் மயமாக்குவதை தேர்ந்தெடுப்பதன் மூலம் காகித பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தும்விதமாக இந்திய ரயில்வே துறை பல்வேறு திட்டங்கள் மூலமாக பணமில்லா பண பரிவர்த்தனைக்கு வழிவகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Indian Railways Catering and Tourism Corporation IRCTC) வாயிலாக நடைபெறும் ரயில் பயண முன்பதிவு முறையை ஒழுங்குப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்வதற்கான முறைகளான கடன் அட்டைகள் (Credit card), டெபிட் கார்டுகள் (Debit card), இ வாலட்கள் (e-wallet) போன்றவை தற்போது சில நாட்களாக கிடைக்கிறது.

ஐஆர்சிடிசி தனது இணையதளமான irctc.co.in ஐ மேம்படுத்திவருகிறது. மேலும் புதிய டிஜிட்டல் அம்சங்களான CNF Probability, ePay Later மற்றும் Track your Train போன்ற ரயில் பயணசீட்டு பெறும் முறையை பயணிகளுக்கு இசைவானதாக மாற்றி வருகிறது.

CNF Probability

முன்பதிவு செய்யப்பட்ட பயணசீட்டுகளில் உறுதியாக இருக்கை கிடைக்குமா என்பதை பயணிகள் முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள இந்த வசதி உதவுகிறது. இதை சோதித்துப் பார்க்க, எந்த இடத்தில் இருந்து எந்த இடத்துக்கு எந்த தேதியில் பயணம் போகிறீர்கள் போன்ற தகவல்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் சென்று உள்ளீடு செய்து கொள்ளுங்கள். அடுத்து find trains என்பதை சொடுக்குங்கள். உடனே பல்வேறு ரயில்களை பற்றிய தகவல் பட்டியல் வரும். அவற்றிலிருந்து ஒரு ரயிலை தேர்ந்தெடுத்து check availability and fare என்பதை சொடுக்குங்கள். ஒருவேளை நீங்கள் தேர்ந்தெடுத்த ரயிலில் இருக்கை இல்லை என்றால் CNF Probability ஆப்ஷனை சொடுக்குங்கள். இது குறிப்பிட்ட நாளில் உங்களது ரயில் பயணசீட்டு உறுதி செய்யப்பட எத்தனை சதவிகிதம் வாய்புள்ளது என்பதை தெரிவிக்கும்.

Track your Train

பயணிகள் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் தற்போது எந்த இடத்தில் வந்துக் கொண்டிருக்கிறது என்ற விபரத்தை இந்த வசதியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் நேரடி நிலையை https://indianrailways.inf என்ற முகவரியில் பார்க்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Irctc irctc news irctc online indian railway indian railway news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X