மே 3-க்கு முன்பு பயணிகள் ரயில் இயங்குமா? ரயில்வே அமைச்சகம் விளக்கம்

Southern railway Trains cancelled: பயணச்சீட்டு கட்டணத் தொகையை பயணிகள் அல்லது வாடிக்கையாளர்கள் 31 ஜூலை 2020 வரை திருப்பி பெற்றுக் கொள்ளலாம்.

IRCTC Tamil News, IRCTC Tamil Nadu News, IRCTC Latest Tamil News, INDIAN RAILWAY Trains, இந்தியன் ரயில்வே, பயணிகள் ரயில்

IRCTC Latest Tamil News: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் பயணிகள் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்காது என இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் வினியோகத்தை உறுதிசெய்வதற்காக, பார்சல் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து சேவைகள் இந்திய ரயில்வேயால் இயக்கப்படுகிறது.

இந்திய ரயில்வேயில் உள்ள எந்த பயணிகள் ரயில்களும் மே 3, 2020 வரை இயங்காது என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளிவந்தவுடன், பயணிகள் ரயில் போக்குவரத்து தொடர்பாக பல வதந்திகள் இந்திய ரயில்வேயின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவது தொடர்பான இந்த குழப்பத்தை சரிசெய்வதற்காக பியூஷ் கோயல் தலைமையிலான மத்திய ரயில்வே அமைச்சகம் ஒரு தெளிவுப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Southern railway Trains cancelled: 3 மே 2020 வரை முழுவதுமாக ரத்து

அந்த அறிக்கையில் நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் 3 மே 2020 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஊரடங்கு காலத்தில் உள்ள பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள கோவிட் -19 ஊரடங்கு காலத்தில், தேசிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே தனது அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் 3 மே 2020 வரை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. எக்ஸ்பிரஸ் அல்லது மெயில் ரயில்கள், பிரீமியம் ரயில்கள், கொங்கன் ரயில்வே, கொல்கத்தா மெட்ரோ ரயில், புறநகர் ரயில் சேவைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவைகளில் அடங்கும்.

எனினும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் வினியோகத்தை உறுதிசெய்வதற்காக, பார்சல் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து சேவைகள் இந்திய ரயில்வேயால் இயக்கப்படுகிறது.

எனினும் ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்ய பயணிகள் செலுத்திய முழு தொகையையும் திருப்பிக் கொடுக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது போக ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து PRS மற்றும் UTS பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் கவுண்டர்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

மே 3, 2020 வரை ரத்து செய்யப்பட்டுள்ள பயணிகள் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுக்கான கட்டணத் தொகை இந்தியன் ரயில்வேயால் ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தானாக திருப்பி செலுத்தப்படும். ரயில் நிலைய கவுண்டர்கள் மூலமாக முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு கட்டணத் தொகையை பயணிகள் அல்லது வாடிக்கையாளர்கள் 31 ஜூலை 2020 வரை திருப்பி பெற்றுக் கொள்ளலாம்.

ஏப்ரல் 15, 2020 முதல் மே 3, 2020 வரை மேற்கொள்ள வேண்டிய பயணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 39 லட்சம் பயணச்சீட்டுகளை இந்திய ரயில்வே ரத்து செய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc latest tamil news southern railway trains chennai trains cancelled

Next Story
”நிருபர், செய்தி வாசிப்பாளர், சீரியல் ஹீரோயின்…” – சரண்யா சீக்ரெட்ஸ்!Vijay TV ayutha Ezhuthu Sharanya Turadi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com