ஐஆர்சிடிசி செயலியில் ரயில் டிக்கெட்டை புக் செய்வது இவ்வளவு சுலபமா?

IRCTC Train ticket : பி.என்.ஆர், ரயில் எண், பயண தேதி, வகுப்பு உள்ளிட்ட உருதி செய்யப்பட்ட டிக்கெட்டின் முழு விவரங்கள் பயணிகளுக்கு எஸ்எம்எஸ்...

Book Train  Ticket Through IRCTC Mobile App : முதலில், உங்கள் மொபைலில் கூகுள் ஸ்டோர் சென்று IRCTC/ செயலியை முதலில் பதிவு இறக்கம் செய்யுங்கள். அல்லது URL irctc.co.in/mobile என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள். பிறகு, உங்கள்  பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்குங்கள்.

உங்கள் IRCTC  செயலியில் ரயில் டிக்கெட்டை எவ்வாறு புக் செய்வது.

படி 1: URL irctc.co.in/mobile சென்று , அல்லது IRCTC செயலியை பதிவிறக்கம் செய்து  உங்களிடம் இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொலை இந்த  உள்நுழைக்கவும்

படி 2: ‘ரயில் டிக்கெட்’  என்ற பிரிவின் கீழ் இருக்கும் ‘எனது பயணத்தைத் திட்டமிடு’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

படி 3: நீங்கள் செய்ய விருக்கும் பயணத் தேதியைத் தேர்ந்தெடுங்கள்.

படி 4: நீங்கள் மட்டும் பயணம் செய்தால் ‘ எக்ஸ்சிஸ்டங்  பேஸஞ்சர்’ என்பதை தேர்தெடுங்கள் , உங்களிடம் வேறுயாரேனும் பயணம் செய்தால் ‘ ஆட் நியூ பேஸஞ்சர்’ என்பதை தேர்ந்தெடுங்கள்.

படி 5: முன்பதிவு விவரங்களை உறுதிசெய்யுங்கள். கிரெடிட் / டெபிட் கார்டு / யுபிஐ / பேடிஎம் மூலம் பணம் செலுத்தி விடுங்கள்.

புதிய ஐபோன்களில் என்னென்ன வசதிகள்- வீடியோ

முன்பதிவு செய்தபின், பி.என்.ஆர், ரயில் எண், பயண தேதி, வகுப்பு உள்ளிட்ட உருதி செய்யப்பட்ட டிக்கெட்டின் முழு விவரங்கள் பயணிகளுக்கு எஸ்எம்எஸ் சில் கிடைக்கும்.  நீங்கள் உங்கள் பயணத்தின் போது ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக இந்த எஸ்எம்எஸ்சைக் காட்டினாலே போதுமானது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close