scorecardresearch

ஐ.ஆர்.சி.டி.சி.யின்  குளுகுளு டூர் பேக்கேஜ்: நீங்க எதிர்பார்க்காத குறைந்த கட்டணம்

வடக்கு இந்தியாவில், மிகவும் அழகான மலைப் பகுதிகள் உள்ளது. இதில் மிகவும் அழகானது ஷிம்லா, குலு மணாலி –தான். இமைய மலையில் உள்ள நகரங்கள் கிட்டதட்ட சொர்க்கத்திற்கு நிகராக இருக்கும் என்று கூறுவார்கள். இந்நிலையில் இந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல அதிகமாக விருப்பப்படுகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சூப்பர் டிராவல் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த புதிய டூர் பேக்கேஜில்  ஷிம்லா, குலு மணாலிக்கு சுற்றுலாப்பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். 7 இரவுகள் மற்றும் 8 பகல்கள் இந்த பயணம் அமையும்.

சுற்றுலா பயணிகள் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு ஷிம்லா செல்வார்கள் . இங்கே இரவு தங்க வேண்டும். தொடர்ந்து முக்கியமான சுற்றுலாத் தளங்கள் சுற்றி காட்டப்படும். அடுத்த நிறுத்தம் மணாலி  ஹொடிம்பா கோவில்,  திபத்திய வழிபாடு தளங்கள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் சுற்றி காட்டப்படும்,  கடைசியாக சண்டிகர் சுற்றி காட்டப்படும்.

இந்த பேக்கேஜில் , விமான டிக்கெட், தங்கும் இடம், உணவு, இப்படி எல்லாவகையான சேவைகளும் வழப்படும். ஆரம்ப விலையாக ரூ 50,000 வசூலிக்கப்படும் .

மேலும் தகவலுக்கு https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SEA23 இணையதளத்திற்கு செல்லவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Irctc new tour package