/indian-express-tamil/media/media_files/RSnK7oaX6LZ2Jn4boTqW.jpg)
குறைந்த கட்டணத்தில் ஐ.ஆர்.சி.டி.சி-யின் இலங்கை டூர் பேக்கேஜ் Picture Source: www.srilanka.travel
ஐ.ஆர்.சி.டி.சி இலங்கையை சுற்றிப் பார்க்க தி ராமாயண சாகா என்ற டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜ்க்கான கட்டணம், மற்ற கட்டணங்கள், அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து இலங்கைக்கு தனித்துவமான விமானப் பயணத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இந்த பேக்கேஜுக்கு 'தி ராமாயண சகா' டூர் பேக்கேஜ் என்று பெயரிட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி 09 மார்ச் 2024 முதல் மார்ச் 15, 2024 வரை 07 நாட்கள் மற்றும் 06 இரவுகள் கொண்ட இந்த டூர் பேக்கேஜை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/wtmcMVe7LMlVOQRZaHTO.jpg)
இந்த 'தி ராமாயண சாகா' பயணத்தின் கீழ், ஐ.ஆர்.சி.டி.சி கொழும்பில் உள்ள முனீஸ்வரர் கோயில், மானாவாரி ராமர் கோயில் மற்றும் கண்டியில் உள்ள ஸ்பைஸ் கார்டன், ரம்போடா நீர் வீழ்ச்சி, தேயிலைத் தோட்டம், நுவரெலியாவில் உள்ள சீதா அம்மா கோயில், அசோக் வாடிகா, கிரிகோரி ஏரி, திவரம்பொல (சீதா அக்னி) ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி-யின் 'தி ராமாயண சாகா' என்ற இலங்கை செல்வதற்கான சுற்றுலா தொகுப்பில், லக்னோவில் இருந்து கொழும்பு- விற்கும் மீண்டும் அங்கிருந்து லக்னோ செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/Q7YZibzirB4BSbJCNmzs.jpg)
இலங்கை சுற்றுலா செல்வதற்கான இந்த விமானப் பயணத் தொகுப்பில், சுற்றுப் பயண விமானப் பயணம், மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிடம், இந்திய உணவுகள் (காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு) ஏற்பாடு செய்யப்படும்.
இந்த டூர் பேக்கேஜுக்கான பேக்கேஜ் விலையானது, பொதுவான தங்குமிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் மூன்று நபர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.71000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இருவர் ஒன்றாக தங்குவதற்கான பேக்கேஜின் விலை ஒருவருக்கு ரூ.72,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியாக தங்குவதற்கான பேக்கேஜ் விலை ஒரு நபருக்கு ரூ.88800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/mbNvmjnxeaIIYAW84PrM.jpg)
குழந்தை பெற்றோருடன் தங்கினால், குழந்தைக்கான பேக்கேஜ் விலை சிறப்பு படுக்கையுடன் ரூ 57,300 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ 54,800 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாப் பயணத் தொகுப்பின் முன்பதிவு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செய்யப்படும். தி ராமாயணா சாகா டூர் பேக்கேஜ் மூலம் இலங்கை இலங்கை சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் www.irctctourism.com-ல் இருந்து முன்பதிவு செய்யலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.