IRCTC Tatkal Booking: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் புக் செய்து வருவதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். பலர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு டிக்கெட் முடிந்துவிட்டதால், தட்கல் புக்கிங் செய்து பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
நீங்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் தட்கல் டிக்கெட்டை எளிதில் புக் செய்வதற்கான வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
பயனர்கள் இந்த வழிகாட்டுதல்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி-யில் (IRCTC) எளிதாக தட்கல் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்ய இதை ட்ரை பண்ணலாம்.
பொதுவாக ஐ.ஆர்.சி.டி.சி-யில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் போது ஐ.ஆர்.சி.டி.சி தளத்தின் வேகம் குறைகிறது என்று பலரும் புகார் கூறுகிறார்கள். ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் தட்கல் புக் செய்யும்போது இணையதளத்தின் வேகம் குறைந்தால், பயனர்களின் விபரங்களை நிரப்ப முடியாமல் போகும். திரும்பவும் விபரங்களை நிரப்ப முயற்சி செய்யும்போது, அதற்குள் இருக்கைகள் நிரம்பி விடும். தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே உள்ளிட்ட பிற ரயில்வே மண்டலங்கள் தீபாவளி பண்டிகையின்போது, ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு ரயில்களை இயக்குகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் சேவைகளை இயக்க உள்ளது.
லட்சக் கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்வதால், ரயில் டிக்கெட் புக்கிங் செய்யப்படுகிற ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக்கிங் மிக வேகமாக நடக்கும். இதனால், டிக்கெட் புக்கிங் செய்வதில் பலர் பின் தங்கிவிடுகிறார்கள். அதனால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, தட்கல் புக்கிங் உடனடியாக செய்ய உதவியாக இருக்கும். அதற்கு பிறகு, உங்களுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.
ஐ.ஆர்.சி.டி.சி-யில் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய, ஐ.ஆர்.சி.டி.சி தட்கல் ஆட்டோமேஷன் கருவியைப் பயன்படுத்துவது அவசியமானது. ஐ.ஆர்.சி.டி.சி தட்கல் ஆட்டோமேஷன் கருவி பயணிகளின் விவரங்களை நிரப்பவும், டிக்கெட்டை விரைவாக பதிவு செய்யவும் உதவுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி தட்கல் ஆட்டோமேஷன் கருவி (IRCTC Tatkal Automation Tool) என்ன என்று கேட்கிறீர்களா? இது ஒரு இலவச ஆன்லைன் கருவி. இந்த ஐ.ஆர்.சி.டி.சி தட்கல் ஆட்டோமேஷன் கருவி முன்பதிவு செய்யும் நேரத்தை குறைக்க உதவுகிறது. உண்மையில், இந்த தளம் டிக்கெட் முன்பதிவு சேவை நேரலைக்கு வந்தவுடன் உடனடியாக பெயர், வயது, பயண தேதி ஆகியவற்றை நிரப்ப உதவுகிறது. இது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறுவதை எளிதாக்குகிறது.
அதனால், நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றல், தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது, இதற்குப் பிறகு IRCTC கணக்கில் உள்நுழையுங்கள். தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், இந்த கருவி தேதி, பயணிகள் விவரங்கள் மற்றும் தேதியை சேமிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. முன்பதிவு செயல்பாட்டின் போது, நீங்கள் விபரங்களை நொடியில் நிரப்ப நீங்கள் தரவை ஏற்று என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு விவரங்கள் சேமிக்கப்படும். இதற்குப் பிறகு, உடனடியாக பணம் செலுத்துங்கள். உங்கள் தட்கல் டிக்கெட் எந்த இடையூறும் இல்லாமல் முன்பதிவு செய்யப்படும். மிகவும் எளிதாக தட்கல் டிக்கெட் புக்கிங் உறுதி செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“