IRCTC Tourism, Thailand Tour Package for 5D/4N: IRCTC 'தாய்லாந்தின் பொக்கிஷங்கள்' என்ற பெயரில் சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது. மிகச் சிறப்பான பேக்கேஜ் என்று இதனை IRCTC குறிப்பிடுகிறது.
டிசம்பர் 29, 2018-லிருந்து ஜனவரி 2, 2019 வரை இந்த பேக்கேஜில் பயணிகள் சுற்றுலா செல்லலாம். தாய்லாந்தின் பட்டயா (Pattaya) மற்றும் பாங்காக் (Bangkok) ஆகிய இரு இடங்களை 5 பகல் / 4 இரவு என்ற அடிப்படையில் பயணிகள் சுற்றிப் பார்க்கலாம். இதற்கான டிக்கெட்டுகளை IRCTC டூரிஸம் தளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம். ஆஃப்லைனிலும் இந்த தளத்தில் டிக்கெட் புக் செய்யலாம்.
IRCTC இணையதள அறிவிப்பின் படி, இந்த பேக்கேஜ் கீழ் மொத்தமாக 36 டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளது. விமான பயணங்கள், ஏர் இந்தியாவில் ரிட்டர்ன் டிக்கெட், சாதாரண விசா கட்டணம, AP மீல்ஸ் (காலை, மதியம் மற்றும் இரவு), புஷ் பேக் சீட்ஸ் கொண்ட ஏசி பேருந்துகளின் கட்டணம் என அனைத்தும் இந்த ஒட்டுமொத்த பேக்கேஜில் அடங்குகிறது.
IRCTC : ஷிலாங்க் - சிரப்புஞ்சி சுற்றிப்பார்க்க வேண்டுமா? சூப்பர் பிளான் இதோ
பட்டயா - கோரல் தீவுகள், அல்காசர் ஷோ, பாங்காக் - பாதி நாள் பாங்காக் சிட்டி சுற்றுலா (கோல்டன் புத்தா + மார்பிள் கோவில் + Reclining புத்தா), சஃபாரி உலகம் மற்றும் மரைன் பார்க் ஆகிய இடங்கள் இந்த பேக்கேஜில் அடங்கும். இந்திரா மார்க்கெட்டில் ஷாப்பிங், 31ம் தேதி இரவு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது DJவுடன் ஒரு Gala Dinner, ஆங்கிலம் பேசும் உள்ளூர் கைடு ஒருவர், 3 நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலில் 2 இரவுகள், டிராவல் இன்சூரன்ஸ் (60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்) மற்றும் அனைத்து வரிகளும் இந்த பேக்கேஜில் கவர் ஆகிறது.
விசாவுக்கு தேவையான ஆவணங்கள்:
புகைப்படம் (35 x 40 mm அளவு, வெள்ளை Background, 80% முகம், matte finish, கண்ணாடியில்லாமல்).
ஒரிஜினல் பாஸ்போர்ட்
கடைசி ஆறு மாத வங்கி பரிவர்த்தனை (சீல் & வங்கியின் கையெழுத்து அவசியம்)