IRCTC பெயரில் போலி வெப்சைட்கள் : சூதானமா இருந்துக்கோங்க மக்காஸ்...

IRCTC alert : IRCTC பெயரில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐஆர்சிடிசி பயனாளர்கள் ரயில் பயண டிக்கெட் புக்கிங், சுற்றுலா திட்டமிடலில் மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

IRCTC alert : IRCTC பெயரில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐஆர்சிடிசி பயனாளர்கள் ரயில் பயண டிக்கெட் புக்கிங், சுற்றுலா திட்டமிடலில் மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian railways, railways, irctc, tickets, ticket booking, irctc tourism

indian railways, railways, irctc, tickets, ticket booking, irctc tourism

IRCTC பெயரில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐஆர்சிடிசி பயனாளர்கள் ரயில் பயண டிக்கெட் புக்கிங், சுற்றுலா திட்டமிடலில் மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

Advertisment

Indian Railway Catering and Tourism Corporation or IRCTC நிறுவனம், ரயில் பயண இ டிக்கெட்டிங் சேவையை வழங்கி வருகிறது. IRCTC பிரிவின் மற்றொரு அங்கமான IRCTC tourism இணையதளம், ரயில் சுற்றுலா, விமான சுற்றுலா , கப்பல் பயணம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

IRCTC பயனாளரா நீங்க? : மெயில் இன்பாக்சை செக் பண்ணுங்க...அலர்ட் ஆகிக்கோங்க

Advertisment
Advertisements

IRCTC-ன் புதிய அறிவிப்பு - இனி ஆன்லைனிலேயே ரயில் முன்பதிவு சார்ட்டை சரி பார்க்கலாம்

இந்நிலையில், irctctour என்ற பெயரில், போலி வெப்சைட் செயல்படுவதாகவும், இந்த இணையதளம், பெருமளவில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. IRCTC பயனாளர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று IRCTC tourism இணையதளத்தின் முகப்புப்பக்கத்தில் எச்சரிக்கை வாசகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போலி வெப்சைட்களில் இருந்து IRCTC பயனாளர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டை சேர்ந்த சாப்ட்வேர் இஞ்ஜினியர், இந்தியன் ரயில்வே பெயரில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்களை விற்பனை செய்துவந்ததும், அவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சமீபத்தில் கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Irctc Indian Railways

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: