Advertisment

இனி நினைச்ச நேரமெல்லாம் திருப்பதி செல்லலாம்! மொத்த செலவுக்கு ரூ. 1,147 போதும்

காலை 8.30 மணி முதலே ரயில்கள் புறப்பட தொடங்கி விடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tirupati balaji temple

tirupati balaji temple

irctc tirupati train: வரும் நாட்களில் குடும்பத்துடன் திருப்பதி செல்ல திட்டமிட்டுருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான் போங்க. இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் நினைத்த நேரத்தில் எந்தவித சிரமமும் இன்றி நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் திருப்பது சென்று வரலாம். இதற்கு ஆகும் செலவு ரூ. 1,147 மட்டுமே. நம்ப முடியவில்லையா?

Advertisment

இந்தியன் ரயில்வேஸ் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் IRCTC இந்த பேக்கேஜை வெளியிட்டுள்ளது. இதுக் குறித்த முழு விபரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஐ.ஆர்.சி.டி.சி ஒரு நபருக்கு ரூ .3,000 க்கும் குறைவாக தெய்வீக பாலாஜி தரிசனம் என்ற பெயரில் இந்த பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் ஆன்மீக பயணம் ஆகும். இதற்காக பிரத்யேகமாக ரயில்கள் திருப்பதி செல்கின்றன. இந்த ரயில்களை நீங்கள் ஆன்லைனில் புக் செய்தால் போதும். காலை 8.30 மணி முதலே ரயில்கள் புறப்பட தொடங்கி விடும்.

இந்த பேக்கேஜில்  ஒரு நபருக்கு ஆகும் செலவு ரூ .1,147. உங்கள் குடும்ப எண்ணிக்கை பொருத்து நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். இதற்கான ரயில் எண்கள் 12643/12645/16734/17488/16688/17429/12734/12764/12797.

publive-image

irctc tirupati train : செய்ய வேண்டியவை!

ஐ.ஆர்.சி.டி.சி அறிவுருத்தல் படி, சுற்றுலாப் பயணிகள் திருமலையில் தரிசனத்திற்கு முன்னர் அவர்களுடைய தனிப்பட்ட (அசல்) அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் . ஒருவேளை மறந்தால் டி.டி.டி நிர்வாகம்  உங்களை தரிசனம் செய்ய  அனுமதிக்காது.

பயணிகளுக்கு கட்டாய ஆடைக் குறியீடு உள்ளது. ஆண்களுக்கு- வெள்ளை தோதி மற்றும் சட்டை அல்லது குர்தா மற்றும் பைஜாமா, பெண்களுக்கு- சேலை அல்லது சல்வார் கமீஸ் (பல்லு அல்லது துப்பட்டா கட்டாயத்துடன்).  டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பதி செல்லபவர்கள் தங்க அனைத்து வசதிகளும் கொண்ட விடுதி வந்தாச்சி!

இனி என்ன தயக்கம் உடனே ஐஆர்சிடிசி தளத்திற்கு சென்று புக்கிங்கை தொடங்குகள்.

Tirupati Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment