Advertisment

அந்தமான் விசிட் : பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல இதுதான் சரியான நேரம்!

சுற்றுலா செல்ல உடனே தயராகுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Tour Package

IRCTC Tour Package

IRCTC Andaman Tour Package :கடற்கரைகள், தீவுகள் என ஜாலியாக அசத்தலாக அந்தமான் செல்ல விரும்புபவர்களுக்கு இந்திய சுற்றுலாத்துறை புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

அருங்காட்சியகம், கார்பைன்ஸ் கோவ் பீச், செல்லுலார் சிறை, கப்பற்படை அருங்காட்சியகம், ராதாநகர் கடற்கரை, காலா பாதர் கடற்கரை ஆகியவற்றை பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்.

நீங்கள் அழகிய தீவுகளைப் பார்வையிட விரும்பினால், ரயில்வேயின் சுற்றுலா பிரிவு மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் இணைந்து 'அந்தமான் எமரால்ட்ஸ்' சுற்றுப்பயணத்தை வழங்குகிறது. சுற்றுப்பயணம் ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடங்குகிறது, இது போர்ட் பிளேர் மற்றும் ஹேவ்லாக் தீவு இடங்களை உள்ளடக்கியது.

சுற்றுப்பயண தொகுப்பில் ரோஸ் தீவு, சர்ச் பேக்கரி, கோர்பின்ஸ் கவர் பீச், கலா பானி சிறை அல்லது செல்லுலார் சிறைச்சாலை ஆகியவை அடங்கும். சுற்றுலாப் பயணிகள் ஹேவ்லாக் தீவுக்கு படகு சவாரி செய்வதையும், உலகப் புகழ் பெற்ற ராதா நகர் கடற்கரை மற்றும் கலா பதார் கடற்கரையையும் காணலாம். இது கடற்படை கடல் அருங்காட்சியகம் (சமுத்ரிகா), மானுடவியல் அருங்காட்சியகம் மற்றும் பலவற்றையும் பார்வையிடும்.

இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளமான IRCTC இணையத்தில் உங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

என்னென்ன வசதிகள் இந்த பேக்கேஜில் அடங்கும் முழு விபரம் இதோ!

1. 3 இரவுகள் போர்டு பிளேரில் தங்கலாம்

2. ஹாவ்லாக் பகுதியில் ஒரு இரவு தங்கும் வசதி உள்ளது.

3. மூன்று பேர் தங்க வேண்டுமென்றால், கூடுதலான படுக்கையும் அளிக்கப்படும்.

4. இருப்பினும் 3 பேர் தங்கும் இந்த வசதி போர்ட் பிளேரில் மட்டுமே உள்ளது. 5.ஹாவ்லாக்கில் இந்த வசதி கொடுக்கப்படாது.

6.சுற்றுலாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்திலேயே பயணிகள் பிக் அப் மற்றும் டிராப் செய்யப்படுவார்கள்.

7.தினமும் காலை உணவு வழங்கப்படும். ஆனால் அந்தமான் சென்றடையும் நாள் மட்டும் காலை உணவு கிடையாது.

செலவு விபரங்கள்:

publive-image

அப்புறம் என்ன குடும்பத்துடன் சுற்றுலா செல்ல உடனே தயராகுங்கள்.

 

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment