IRCTC நிர்வாகம், புதிய சுற்றுலா அறிவிப்பு ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பாங்காக், கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களை ஒருங்கிணைத்து இந்த டூர் பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து தொடங்கும் இந்த சுற்றுப்பயணம், 9 இரவுகள், 10 பகல் கொண்டுள்ளது. 2018, ஆகஸ்ட் 11ம் தேதி இந்த டூர் பயணம் தொடங்குகிறது. ஏர் இந்தியா மற்றும் ஏர் ஏசியா விமானத்தில் எகானமி வகுப்பில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க முடியும். ஜிஎஸ்டியை உள்ளடக்கி, ஒரு நபருக்கு ரூ.99,790 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
IRCTC 10 நாள் ஆசிய சுற்றுப்பயண விவரம்:
பேக்கேஜ் பெயர் - பெஸ்ட் ஆஃப் எக்ஸ் மும்பை
பயண இடங்கள் - பாங்காக், பட்டாயா, கோலா லம்பூர் மற்றும் சிங்கப்பூர்
விமான பயணம்
பயணம் தொடங்கும் தேதி - 11.08.2018
உணவு விவரம்: (காலை, மதியம் & இரவு)
மொத்த இருக்கைகள் - 35
"Best of Asia" டூர் குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டியவை:
1, இந்த பயணத்தின் கட்டணம் 99,790. மூன்று இருக்கைகள் வசதி கொண்ட ஷேரிங்கை தேர்வு செய்பவர்களுக்கே இந்த கட்டணம். சிங்கிள் இருக்கை தேர்வு செய்பவர்களுக்கான கட்டணம் 1,20,090.
Child with Bed (02-11 years) 85,890/-
Child without Bed (02-11 years) 73,190/-
2. மும்பை டூ பாங்காக் ஏர் இந்தியா விமானத்திலும், பாங்காக் டூ கோலா லம்பூர் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்யப்படும்
3. பட்டாயா - அல்கசர், கோரல் தீவுகள்
பேங்காக் - பேங்காக் நகரம், சஃபாரி வேர்ல்டு மற்றும் மரைன் பார்க்
கோலா லம்பூர் - Batu குகைகள், புத்ரஜெயா நகரம், கோலா லம்பூர் நகரம்
சிங்கப்பூர் - சிங்கப்பூர் நகரம், மெர்லியன் பார்க், சிங்கப்பூர் ஃபிளையர், சென்டோஸா தீவுகள், சிங்கப்பூர் பூங்கா.
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் நுழைவுக் கட்டணம் மொத்த கட்டணத்தில் அடக்கம்.
4. விசா செலவுகள் உள்ளிட்ட இதர செலவுகள் பேக்கேஜில் அடக்கம். 70 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இன்சூரன்ஸும் உண்டு.
மேலும், முழு தகவல்களுக்கு irctctourism.com தளத்தை பார்க்கவும்.