Advertisment

கோவா செல்ல உங்களை வா வா என்றழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி

IRCTC Goa Tour Package : ஐஆர்சிடிசி பொறுத்த வரை, இந்த பேக்கேஜின் கீழ் ரயில் கட்டணம், ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் இடத்திற்கு பயணிக்கும் செலவு, காலை உணவு, இரவு உணவு, தங்கும் இடத்திற்கான கட்டணம், ஏசி பேருந்து கட்டணம், சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
goa tourism, goa tour package, goa tourist place, goa packages, irctc goa package, irctc goa offer booking, places to visit in goa, goa packages by irctc, goa sightseeing, miramar beach, old goa church, mangeshi temple, fort aguada, anjuna beach, dona paula queen of beaches, calangute beach

goa tourism, goa tour package, goa tourist place, goa packages, irctc goa package, irctc goa offer booking, places to visit in goa, goa packages by irctc, goa sightseeing, miramar beach, old goa church, mangeshi temple, fort aguada, anjuna beach, dona paula queen of beaches, calangute beach

IRCTC Tourism Offers : சுற்றுலா என்றாலே இந்தியா முதல் வெளிநாட்டினர் அனைவரின் மனதிலும் வரும் முதல் எண்ணம் கோவா தான்.

Advertisment

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தளங்களில், கோவா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு இடம். முன்பெல்லாம், பார்ட்டி, விடுமுறை, அல்லது வெகேஷன் என்றால் தான் கோவா செல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம், திருமணம் என்றாலே கோவாவில் தான் என்றளவுக்கு இளைஞர்களின் கவனம் மொத்தத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.

இத்தகைய கோவாவை நீங்களும் ஒரு முறை சுற்றிப் பார்க்கலாம். அதற்காக ஐஆர்சிடிசி புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் அறிவித்திருக்கும் டூர் பேக்கேட்ஜ் மூலம் சுற்றுலா பயணிகள் 2 இரவுகள் 3 நாட்கள் கோவாவில் தங்கி சுற்றிப் பார்க்கலாம்.

ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ள இந்த சுற்றுலா பேக்கேஜில் ஒருவருக்கு மட்டும் ஆக செலவு 12,625 ரூபாய். இந்த பயணம் ஹைதராபாத்தில் இருந்து தொடங்குகிறது. ஐதரபாத்திலிருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி புறப்படும் இண்டிகோ விமானத்தின் மூலம் பயணிகள் செல்வார்கள்.

ஐஆர்சிடிசி பொறுத்த வரை, இந்த பேக்கேஜின் கீழ் ரயில் கட்டணம், ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் இடத்திற்கு பயணிக்கும் செலவு, 3 காலை உணவுகள் மற்றும் 2 இரவு உணவு, தங்கும் இடத்திற்கான கட்டணம், ஏசி பேருந்து கட்டணம், சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பயணத்திற்கான டிக்கெட் செலவை ஐஆர்சிடிசி இணையத்தில் பதிவு செய்து கட்டலாம்.

தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த சுற்றுலா பயணம் உங்களால் மேற்கொள்ள முடியவில்லை என்றால், ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் ரத்து செய்துக் கொள்ளலாம்.ஐஆர்சிடிசி பொறுத்த வரை, இந்த பேக்கேஜின் கீழ் ரயில் கட்டணம், ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் இடத்திற்கு பயணிக்கும் செலவு, 3 காலை உணவுகள் மற்றும் 2 இரவு உணவு, தங்கும் இடத்திற்கான கட்டணம், ஏசி பேருந்து கட்டணம், சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

Goa Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment