IRCTC Tour Packages: சமீப காலமாக சுற்றுலா துறையில் கலக்கிக் கொண்டிக்கிருக்கும் இந்திய ரயில்வேயின் துறையின் ஆன்லைன் டிக்கெட் பிரிவான ஐஆர்சிடிசி தனது புதிய சுற்றுலா பேக்கேஜ்களை சென்னை வாசிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த குறிப்பிட்ட சுற்றுலா பேக்கேஜ்களின் வெற்றி தோல்வியை , சுற்றுலா பயனாளியாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
எண்ணற்ற இயற்கை அதிசயங்களுக்கும் , மனித ஆச்சரியங்களுக்கும் பெயர்போன அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றுலா தளமாக மாற்றிக் கொண்டிருக்கிறது நமது ஐஆர்சிடிசி . ஆறு பகல் மற்றும் ஐந்து இரவுகள் உள்ளடக்கிய இந்த சுற்றுலா திட்டத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகவும் பிரபலமான போர்ட் பிளேர் மற்றும் ஹேவ்லாக் தீவுகளை நம்மால் கண்டுகளிக்க முடியும். இந்த சாகச சுற்றுலாவை தனிநபர் ஒருவருக்கு ரூபாய் 36500 என்ற பேக்கேஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பேக்கேஜிலேயே தங்கும் விடுதி, மூன்று வேளை உணவு ,பயண காப்பீடு உள்ளடக்கப்பட்டது.
இந்த சுற்றுப்பயணம் விமானங்கம் மூலம், வருகின்ற செப்டம்பர் மாதம் தேதி 28ந் தேதி சென்னையிலிருந்து இருந்து தொடங்கவுள்ளதாக ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்திற்கு தேவைப்படும் சில முக்கிய விஷயங்கள் இங்கே :
பேக்கேஜ் தகவல்கள்:/tamil-ie/media/media_files/uploads/2019/07/package-details-300x232.png)
விமானம் தொடர்பான தகவல்கள்:
*விமானங்களின் செயல்பாட்டின் சாத்தியத்திற்கு ஏற்ப விமான நேரம் அல்லது அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது.
பேக்கேஜ்களின் விலைப் பட்டியல்:
/tamil-ie/media/media_files/uploads/2019/07/package-tariff-300x116.png)
*0-4 வயதிற்கான குழந்தை கட்டணத்தை நீங்கள் புக்கிங் செய்யும் போது ஐ ஆர் சி டி சி அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்திவீர்கள்.
பேக்கேஜ்க விலைப் பட்டியலில் சொல்லப்பட்டுள்ள single occupancy ,double Occupancy என்பதற்கு சிங்கிள் ரூம் ,டபுள் ரூம் என்பது பொருள் .
அன்றாட வாழ்வில் நாம் தொலைத்த அதிசயத்தையும் , ஆச்சரியத்தையும் இந்த அறிவிப்பின் மூலம்
அதை அந்தமானில் தேட கிடைத்த ஒரு வாய்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.