Advertisment

ரயில் பயணத்திற்கு தயாரா? . டிக்கெட் புக் பண்ண ஐஆர்சிடிசி இணையதளம், மொபைல் ஆப் எது சிறந்தது?

IRCTC : ரயில் புறப்படுவதற்கு முன்னால் அனைத்து பயணிகளும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irctc, train journey, ticket booking, irctc train tcket booking,irctc online irctc train ticket booking, irctc ticket booking, irctc.co.in, www.irctc.co.in, irctc website, irctc app, irctc special train ticket booking, irctc train ticket, irctc ticket booking online, irctc special train ticket booking, irctc online, irctc online ticket booking, irctc ticket, how to book online train ticket

irctc, train journey, ticket booking, irctc train tcket booking,irctc online irctc train ticket booking, irctc ticket booking, irctc.co.in, www.irctc.co.in, irctc website, irctc app, irctc special train ticket booking, irctc train ticket, irctc ticket booking online, irctc special train ticket booking, irctc online, irctc online ticket booking, irctc ticket, how to book online train ticket

இந்தியன் ரயில்வே பயணிகள் ரயில் போக்குவரத்தை மே 12 முதல் படிப்படியாக தொடங்கியுள்ளது. ஊரடங்குக்கு மத்தியில் கரோனா நோய் அறிகுறியற்ற, உறுதிபடுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்துள்ள பயணிகள் மட்டும்தான் ரயில் பயணத்தை மேற்க்கொள்ள முடியும் என உள்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையான இயக்க நடைமுறையில் (standard operating procedure) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குறிப்பாக பயணிகள் ஆன்லைன் மூலமாக ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் கைபேசி ஆப் மூலமாக மட்டும் தான் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியும். இந்திய ரயில்வே பயணச்சீட்டு கொடுக்கும் கவுண்டர்களில் யாரும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யமுடியாது. ரயில் புறப்படுவதற்கு முன்னால் அனைத்து பயணிகளும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் மேலும் பரிசோதனைக்கும் உட்படுத்தபட்டிருக்க வேண்டும். நோய் அறிகுறியற்ற பயணிகள் மட்டும் தான் ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவர், என இந்தியன் ரயில்வே உறுதிபடுத்தியுள்ளது. மே 11 ஆம் தேதி 4 மணி முதல் முன்பதிவு தொடங்கியது.

ஐஆர்சிடிசி வலைதளம் மூலமாக எவ்வாறு பயணச்சீட்டு முன்பதிவு செய்வது

* irctc.co.in. என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

* தளத்தின் வலது மூலையில் உள்ள ‘Register’ பொத்தானை அழுத்தி ஒரு ஐஆர்சிடிசி கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும்.

* பயனர் பெயர், கடவுச்சொல், விரும்பும் மொழி, பெயர், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, முகவரி ஆகிய விவரங்களை நிரப்பி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு, register பொத்தானை அழுத்தி கணக்கை திறக்க வேண்டும்.

* ஏற்கனவே பதிவு செய்துள்ள பயனர்கள் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து உள்நுழையவும்.

* எங்கிருந்து எங்கு பயணம் செய்ய போகிறீர்கள் என்ற விவரம், பயண தேதி, விரும்பும் வகுப்பு ஆகியவற்றை உள்ளீடு செய்து, Find Trains என்ற தேர்வை சொடுக்கவும்.

* எந்த ரயிலில் பதிவு செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

* இருக்கைகளின் இருப்பு மற்றும் பயண கட்டணத்தை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

* இருக்கை இருந்தால் முன்பதிவு செய்து, பணத்தை செலுத்தி, பயணச்சீட்டை எடுத்துக் கொள்ளவும்.

ஐஆர்சிடிசி ஆப் மூலமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்வது.

* லாக் இன் விவரங்களை கொடுத்து கணக்கில் உள்நுழையவும்.

* Plan my journey என்பதை தேர்வு செய்து எங்கிருந்து எங்கு வரை பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை உள்ளீடு செய்து ரயில்களை தேடிக் கொள்ளவும்.

* Select trains > coach type > check availability > பயணிகள் விவரங்களை தெரிவிக்கவும்.

* கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பதிவிரக்கம் செய்து கொள்ளவும்.

அனைத்து பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்துக்கு வந்து விட வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment