/tamil-ie/media/media_files/uploads/2019/04/Won_t_Force_My_3464-2.jpg)
IRCTC tatkal train ticket booking
எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் வயநாட்டில் தரிசிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள வயநாடு பகுதிக்கு உலகம் முழுவதுமிருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் மழைக்காலத்தின்போது விஜயம் செய்யும் வெளியூர் பயணிகளை வயநாட்டின் இயற்கையழகு பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது.
எடக்கல் குகைகள், மீன்முட்டி அருவி, குருவா டிவீப், சூச்சிப்பாறை அருவி, செம்பரா சிகரம் ஆகிய இடங்கள் வயநாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றது. இப்படி இயற்கை எழில் கொஞ்சும் வயநாட்டிற்கு குறைந்த செலவில் செல்ல ஐஆர்சிடிசி- யில் சுற்றுலா பேக்கேட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
IRCTC Wayanad, Kerala Tour Package: குறைந்த செலவில் வயநாடு செல்லாம்!
வார நாளில் வியாக்கிழமை மட்டும் சென்னையில் இருந்து வயநாடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நீங்கள் இந்த சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயிலில் பயணிகள் செல்ல வேண்டும்.
Chennai Mangalore Express 12685 : சென்னையில் இருந்து கோழிக்கோடு செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு வயநாடு சென்றடையும்.
12686 Mangalore Chennai Express : சுற்றுலா முடிந்தவுடன் கோழிக்கோட்டில் இரவு 9 மணிக்கு புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 8 மணிக்கு சென்னை வந்தடையும்.
சுற்றுலா பேக்கேட்ஜ் விலை குறித்த முழு விபரம்:
தங்கும் அறை விபரம்:
ஒரு அறையில் தங்கியிருக்கும் நபர்களுக்கு மட்டுமே பெட் வசதி செய்து தரப்படும். குழந்தைகளுக்கு தனியாக பெட் வேண்டும் என்றால் அதற்கு அனுமதி இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.