Advertisment

காண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு!

Amarnath Yatra package : இரவு ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இரவு உணவு வழங்கப்படும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC’s Amarnath Yatra

IRCTC’s Amarnath Yatra

IRCTC’s Amarnath Yatra Package : ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் புனித யாத்திரை பயணமான அமர்நாத் யாத்திரை செல்ல ஐஆர்சிடிசி 4 நாட்கள் கொண்ட பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் சென்னையில் இருந்து மக்கள் நேரடியாக் செல்ல இது மிகச் சரியான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க.

Advertisment

தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக்கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செய்வார்கள்.

மஇந்த யாத்திரையில் கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அமர்நாத் குகைக்கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாது. நடைப்பயணமாக தான் செல்ல முடியும். மேலும், பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். எனவே, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்த பின்னர் அங்கு சென்று வருகின்றனர்.

இந்த ஆண்டில் 46 நாட்கள் நடைபெறும் இப்புனிதயாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி முடிவடைகிறது. ஆண்டுக்க்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் இந்த புனித யாத்திரையில் நீங்களும் கலந்துக் கொள்ள ஐஆர்சிடிசி மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

publive-image

IRCTC’s Amarnath Yatra Package குறித்த முழு விபரங்கள்!

‘அமர்நாத் யாத்ரா பை ஃப்ளைட் எக்ஸ் சென்னை’ என்ற சிறப்பு சுற்றுலா பேக்கேஜை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது சென்னையிலிருந்து அமர்நாத் சென்று  மீண்டும் சென்னைக்கு திரும்பும் 4 நாட்கள் கொண்ட பேக்கேஜ்.

ஐ.ஆர்.சி.டி.சி ‘அமர்நாத் யாத்ரா பை ஃப்ளைட் எக்ஸ் சென்னை’ டூர் தொகுப்புக்கான புறப்படும் தேதி ஜூலை  20 .   இந்த 4 நாட்கள் பயணம் விமானம் மூலம் என்பதால் பயணிகள் விமானங்கள் நேரம் ஆகியவற்றை தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும், காலநிலை பொருத்து புறப்படும் நேரம் மாறினாலும் அந்த விவரங்கள் செயலி மூலம் உங்களுக்கு தெரிந்து விடும்.

கட்டண விபரங்கள்:

ஒரு நபருக்கு  ரூபாய் 43,850 / -

ஒரு  நபர் இரண்டு  சீட்களை பகிர்ந்துக் கொண்டால்- ரூபாய் 35,900 / -

ஒரு நபர்  மூன்று சீட்களை பகிர்ந்துக் கொண்டால்- ரூபாய் 35,100 / -

பயணம்முதல் நாள் காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து ஸ்ரீநகருக்கு பயணிகள் போர்டு விமானம் புறப்பட்டு ஸ்ரீநகர் விமான நிலையத்தை அடைந்ததும், பயணிகள் சோன்மார்க்கிற்கு மாற்றப்படுவார்கள், அங்கு அவர்கள் இரவு ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இரவு உணவு வழங்கப்படும்.

இரண்டாவது நாளில், பயணிகள் காலை உணவுக்குப் பிறகு நீல்கிராத் ஹெலிகாப்டர் பேடிற்கு மாற்றப்படுவார்கள், அங்கு அவர்கள் ஹெலிகாப்டரில் நீல்கிராத்திலிருந்து பஞ்ச்தர்னி வரை செல்வார்கள். பஞ்ச்தர்ணி புனித ஆலயத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.  பயணிகள் தங்கள் சொந்த செலவில் பால்கி / போனியை நடத்தலாம் அல்லது வாடகைக்கு எடுக்கலாம். தர்ஷனுக்குப் பிறகு பயணிகள் அதே நாளில் நீல்கிராத் திரும்பும் பயணத்திற்காக ஹெலிகாப்டரில் ஏற பஞ்ச்தர்னிக்கு திரும்புவார்கள்.

பின்னர் அவர்கள் இரவு தங்குவதற்காக சோன்மார்க்கிற்கு மாற்றப்படுகிறார்கள். 2 ஆம் நாள் காலை உணவு மற்றும் இரவு உணவு மட்டுமே வழங்கப்படும்.

பின்னர் பயணிகள் அடுத்த நாள் காலை உணவுக்குப் பிறகு ஸ்ரீநகருக்கு புறப்படுவார்கள். அங்கு அவர்கள் ஷாலிமார் / முகலாய தோட்டத்தைப் பார்வையிட்டு மூன்றாம் நாளில் தால் ஏரியில் படகு சவாரி செய்வார்கள்.

சரியாக நான்காவது நாள், பயணிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு மாலை 4:05 மணிக்கு சென்னை திரும்பும் விமானத்தில் ஏறுவார்கள் .

Amarnath Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment