ஒரு முறை பூண்டு குழம்பு சாதம், இப்படி செய்துபாருங்க. இர்பான் சமீபத்தில் ஒரு வீடியோவில் பூண்டு குழம்பு சாதத்தை ரிவ்யூ செய்திருப்பார். அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
8 பூண்டு
1 ஸ்பூன் சீரகம்
கால் ஸ்பூன் வெந்தயம்
1 ஸ்பூன் மிளகு
6 சின்ன வெங்காயம்
1 கொத்து கருவேப்பிலை
1 தக்காளி
4 ஸ்பூன் நல்லெண்ணை
அரை டீஸ்புன் கடுகு
அரை டீஸ்பூன் உளுந்து
கால் ஸ்பூன் வெந்தயம்
1 கொத்து கருவேப்பிலை
15 சின்ன வெங்காயம்
8 பூண்டு
காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன்
1 ஸ்பூன் மல்லித்தூள்
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
சின்ன நெல்லிக்காய் அளவு புளி
கால் ஸ்பூன் வெல்லம்
2 கப் வேக வைத்த சாதம்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில், பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், வெந்தயம், மிளகு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். இதை தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தற்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேத்து கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் மிளகாய் பொடி, உப்பு, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். இதில் அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். புளி கரைசலை சேர்த்து கிளரவும். எண்ணெய் பிரிந்து வந்ததும். வெல்லம் சேர்த்து கிளரவும். தற்போது, இந்த பூண்டு குழம்பில், வேக வைத்த சாதத்தை சேர்த்து, நெய் சேர்த்து கிளரி சாப்பிடவும்.