பெண்களின் இயற்கையான வாழ்வியலில் மாதவிடாய் முதன்மை பெறுகிறது. எனினும், இந்தக் காலகட்டத்தில் பெண்கள் சில பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
அந்த வகையில் இரும்பு சத்து குறைபாட்டினால் பெண்கள், குழந்தைகள் எதிர்கொள்ளும் 10 முக்கிய பிரச்னைகள் குறித்து பார்க்கலாம்.
1.. சோர்வு
உடலில் சோர்வு அதிகம் இருந்தால், அதற்கு முதன்மையான காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இதன் குறைபாட்டினால், ஆக்ஸிஜன் உடலில் குறைந்து, ஆற்றல் குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் சிறு வேலை செய்தால் கூட மிகுந்த சோர்வு ஏற்படும்.
2.. மூச்சுவிடுவதில் சிரமம்
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், ஒன்று நுரையீரல் பிரச்சனையாக இருக்கும் அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.
3.. அதிகப்படியான இரத்தப்போக்கு
மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கு அளவுக்கு அதிகம் ஏற்பட்டால், அதற்கு காரணமும் இரும்புச்சத்து குறைபாடு தான். எனவே மாதவிடாய் காலத்தில் எண்ண முடியாத அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை சந்தியுங்கள்.
4.. தசை வலி
உங்கள் தசைகளில் அடிக்கடி எரிச்சலுடன் கூடிய வலி அதுவும் உடற்பயிற்சி செய்த பின் கூட இம்மாதிரியான வலி ஏற்படலாம். அப்படியெனில், உங்களின் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
5.. வெளிரிய சருமம்
கன்னங்கள், உதட்டின் உள்ளே மற்றும் கண் இமைகளுக்கு அடிப்பகுதியில் உங்கள் சருமம் வெளிரிப் போயிருந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஏனெனில் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தான் அவை.
6.. ஐஸ், சாக்பீஸ், களிமண்
சில குழந்தைகள் சாக்பீஸ், பேப்பர் அல்லது களிமண் சாப்பிடுவதை கண்டிருப்பீர்கள். இதற்கு காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். இக்குறைபாட்டினால் தான் இப்பழக்கங்களைப் பின்பற்ற நேரிடுகிறது. இது நம்பமுடியாதவாறு இருந்தாலும், அது தான் உண்மை.
7.. தலைவலி
நீங்கள் கடுமையான தலைவலியை பல நாட்களாக உணர்ந்து வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டினால் உங்கள் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் அடிக்கடி தலைவலியால் கஷ்டப்பட்டால், மருத்துவரை உடனே சந்தியுங்கள்.
8.. பதற்றம்
பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால் பதற்றமானது நரம்புகளினால் ஏற்படுவது. நீங்கள் சமீப காலமாக அதிகமாக பதற்றமடைந்தால், உங்களின் இரும்புச்சத்தின் அளவை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.
ஏனெனில் உங்கள் இதயம் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததால், வேகமாக துடித்து, அதனால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுகிறது.
9.. முடி உதிர்தல்
முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், இரும்புச்சத்து குறைபாடும் ஓர் முக்கிய காரணமாகும். நீங்கள் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருதுந்தால்உங்கள் முடி அதிகமாக உதிர்வதை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி, இது நீடித்தால், நாளடைவில் வழுக்கைத் தலை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
10.. ஹைப்போ தைராய்டு
உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டு, அதனால் ஹைப்போ தைராய்டு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.
தகவல், சித்த மருத்துவர், ஆராய்சியாளர் முத்துக்குமார் (9344186480)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.