இரும்புச் சத்து ஒரு நாளைக்கு 10 மில்லி கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இரும்புச் சத்துகள் நிறைந்த உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
பசலைகீரை, சிறுகீரை, முருங்கைக் கீரை போன்றவற்றில் இரும்புச் சத்து இருக்கிறது. குறிப்பாக 100 கிராம் கீரையில், 2 முதல் 2.5 மில்லி கிராம் வரை இரும்புச் சத்து இருக்கிறது.
இதேபோல், அசைவ உணவுகளிலும் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. சுமார் 100 கிராம் அசைவ உணவில் 3 மில்லி கிராம் வரை இரும்புச் சத்து இருக்கிறது.
முளைகட்டிய பச்சை பயிறு வகைகளில் 1.5 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. முளைகட்டிய மற்ற தானியங்களில் சுமார் 3 மில்லி கிராம் வரை இரும்புச் சத்து காணப்படுகிறது.
பேரீச்சம்பழத்தில் இருப்பதை விட இது போன்ற உணவுகளில் அதிகப்படியான இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. ஏனென்றால், இவற்றில் மற்ற சத்துகளும் சேர்ந்தே இருக்கின்றன.
இதனால், கீரை வகைகள், அசைவ உணவுகள், முளைகட்டிய பயிறு வகைகளை சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“